முட்டாள் காவல்காரன்
19 சித்திரை 2026 ஞாயிறு 15:31 | பார்வைகள் : 1533
முன்னாடி ஒரு காலத்துல முத்தமிழ் நாடு அப்படின்னு ஒரு பேரரசு இருந்துச்சு அந்தப் பேரரசுக்கு கீழ நிறைய மக்கள் வாழ்ந்துட்டு வந்தாங்க அந்த நாட்டை முத்தரசன்னு ஒரு அரசர் நல்லா ஆட்சி செஞ்சுகிட்டு வந்தாரு அவரோட ஆட்சியில் பசி பட்டினி இல்லாம எல்லா மக்களும் நல்லா வாழ்ந்தாங்க.
அவரு தன்னோட தலை நகரத்துல ரொம்ப பெரிய அரண்மனை ஒன்னு வச்சிருந்தாரு அந்த அரண்மனைக்கு பக்கத்துல இன்னும் ஒரு தென்னந் தோட்டம் வளர்த்தா நல்லா இருக்கணும்னு தோணுச்சு அவருக்கு,அப்படி வச்சு அரண்மனை சமையல் தேவைக்கு தேங்காய் சுலபமா கிடைக்கும்னும் நம்புனாரு அவரு
உடனே பக்கத்து நாட்டில் இருந்து புதுசா தென்னங்கன்னு கொண்டு வந்து அரண்மனை வெளித்தோட்டத்தில் நட்டு வச்சாரு அவரு அந்தத் தென்னகன்றுகளை நல்லா வளக்கறதுக்கும் ஆடு மாடுகள் சாப்பிடாமல் இருக்குறதுக்கு பாதுகாப்பாகவும் சிவன்னு ஒருத்தர காவலுக்கு நியமிச்சாரு முத்தரசன் அரசன்
என்னதான் சிவம் நல்லபடியா தென்னை மரத்தை பாத்துக்குற திறமையோடு இருந்தாலும் அவன் ஒரு அடி முட்டாள் ராப்பகலா கண்விழிச்சி அரசர் சொற்படி தென்னந்தோப்பை காவல் காத்துகிட்டு வந்த சிவம் ஒரு நாள் ரொம்ப சோர்ந்து போனான்
தென்னங்கன்றுகள பார்த்துக்குறதுதானே என்னோட வேலை இதை எங்க வச்சு பாத்துக்கிட்டா என்னனு நினைச்ச அந்த முட்டாள் சிவம் எல்லா தென்னங்கன்னையும் புடிங்கி தன்னுடைய வீட்டுக்கு கொண்டு போயி தன்னோட படுக்கைக்கு பக்கத்துல பத்திரமா வச்சுட்டு அது பக்கத்திலேயே படுத்து தூங்குனான்
தான் புதுசா தொடங்கின தென்னந்தோப்பு எப்படி நிலைமையில இருக்கு அப்படின்னு பார்வையிட வந்த அரசருக்கு ஒரே அதிர்ச்சி முட்டாளான சிவம் செஞ்ச காரியத்தை நினைத்து கோபப்படுறதுக்கு பதிலா சிரிப்பு தான் வந்துச்சு அரசருக்கு
அப்பத்தான் அரசு சொன்னாரு யாருக்கு என்ன வேலை கொடுத்தா எப்படி முடிப்பாங்கன்னு தீர விசாரிக்காம உன்கிட்ட இந்த பொறுப்பை கொடுத்தது என்னோட தப்பு தான்
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
அப்படிங்கிற குறள் அவருக்கு ஞாபகத்துக்கு வந்துச்சு ,அதுல திருவள்ளுவர் எழுதி இருக்கிற இந்தக் குரல்படி தன்னைத்தானே திருத்திக்கிட்டு தன்னோட தென்னந்தோப்பை நல்லபடியா பாதுகாக்கிறது யாருன்னு தேடி கண்டுபிடிச்சு அவரை நினைச்சு தன்னோட தென்னந்தோப்பு நல்லா வளர்த்தாரு அரசர்Poetry
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire