அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து பணத்தை கட்டுக்கட்டாக தூக்கி வீசிய பெண்
19 சித்திரை 2026 ஞாயிறு 06:51 | பார்வைகள் : 1317
சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து பண நோட்டுகளை பெண் ஒருவர் தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் சாந்தௌ (Shantou) பகுதியில் உள்ள ஸ்டார் லேக் சிட்டியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் ஜன்னல் வழியாக கட்டுக் கட்டாக பணத்தை வெளியே வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்டிடத்தில் இருந்து கிட்டத்தட்ட 1000 ஹாங்காங் டொலர் நோட்டுகள் வீசப்பட்டதை கண்ட அப்பகுதியினர் தரையில் விழுந்த பணத்தை எடுக்க முண்டியடித்தனர்.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்குள் வருவதற்குள் பெரும்பாலான பணத்தை மக்கள் சுருட்டிக் கொண்டனர்.
பண மழை தொடர்பான வீடியோக்கள் சமுக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீசப்பட்ட அனைத்து நோட்டுகளும் உண்மையான கரன்சி தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தரையில் விழுந்த பணத்தை எடுத்த பொதுமக்கள் உடனடியாக அந்த பணத்தை நிர்வாக அலுவலகத்திலோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திலேயே ஒப்படைக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட பெண் ஏன் தூக்கி வீசினார் என்று அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
ரோட்டில் வீசப்பட்ட பணம் எவ்வளவு என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரியவரவில்லை. நேரில் பார்த்த சாட்சிகளின் கூற்றுப்படி சுமார் 2 லட்சம் முதல் 20 லட்சம் ஹாங்காங் டொலர்கள் என தோராயமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire