மார்ச் 8ஆம் தேதியை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் – CGT தலைவர் கோரிக்கை !!
18 சித்திரை 2026 சனி 07:45 | பார்வைகள் : 3406
அரசு விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என CGT தொழிற்சங்க தலைவர் Sophie Binet தெரிவித்துள்ளார். தற்போது சராசரியாக 11 அரசு விடுமுறை நாட்கள் உள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அது 12 ஆக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனை முன்னிட்டு, பெண்களின் உரிமைக்கான சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதியை, மே 1ஆம் தேதி தொழிலாளர் தினம் போலவே கட்டாய விடுமுறை, வேலை இல்லாத மற்றும் சம்பளத்துடன் கூடிய நாளாக அறிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மே 1ஆம் தேதி வெதுப்பகம் மற்றும் பூக்கடை வியாபாரிகள் வேலை செய்ய அனுமதி வழங்குவது குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில், CGT அமைப்பு அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த நாள் ஒரு சிறப்பு விடுமுறை நாளாகவே தொடர வேண்டும் என்றும், பொதுவாக அனைத்து துறைகளுக்கும் வேலை அனுமதி வழங்கக் கூடாது என்றும் Sophie Binet தெரிவித்தார். வெதுப்பகங்கள் ஏற்கனவே திறக்க அனுமதி உள்ளதாகவும், பூக்கடை வியாபாரிகள் தாங்களே வேலை செய்யலாம் ஆனால் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்றும் அவர் விளக்கினார்.
மேலும், பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய தீர்வு வேலை நேரத்தை அதிகரிப்பது அல்ல, மாறாக சம்பளத்தை உயர்த்துவதாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதனுடன், Stellantis நிறுவனத்தின் Poissy தொழிற்சாலை 2028க்குள் வாகன உற்பத்தியை நிறுத்தும் முடிவு மிகக் கவலைக்கிடமானது எனவும் அவர் தெரிவித்தார். இது ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை பாதிக்கும் என்றும், பிரான்சில் உற்பத்தியைத் தொடர அரசு தலையீடு அவசியம் என்றும் அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire