தொகுதி மறுவரையறை நன்மைகள்: திமுகவால் சொல்லப்படாத உண்மைகள்
17 சித்திரை 2026 வெள்ளி 08:34 | பார்வைகள் : 141
நாடு முழுவதும் 5 மாநில சட்டசபை தேர்தல் ஒருபக்கம் நடந்துகொண்டு இருந்தாலும் தொகுதி மறுவரையறை பற்றி இன்னொரு பக்கம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்கட்சிகள் மட்டும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
எம்பி தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என தொடர்ந்து தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. உண்மையில் இதனால் ஏற்படும் நன்மைகளை தமிழக கட்சிகள் வெளியே சொல்வதில்லை. ஆனால், இதனை நடைமுறைப்படுத்துவதால் நன்மைகளே மேலோங்கி இருப்பதாக மத்திய பா.ஜ., அரசு தொடர்ந்து சொல்லி வருகிறது. ஆனால் திமுக.,வோ இது ஆபத்து என பொத்தாம் பொதுவாக எதிர்ப்பு தெரிவிக்கிறது.
தொகுதி மறுவரையறை என்றால் என்ன?
இந்தியாவில் தொகுதி மறுவரையறை (Delimitation) என்பது மக்கள் தொகை மாற்றங்களுக்கு ஏற்ப பார்லிமென்ட் மற்றும் சட்டசபை தொகுதிகளின் எல்லைகளை அல்லது எண்ணிக்கையை மாற்றியமைக்கும் ஒரு முக்கியமான ஜனநாயக செயல்முறை. ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் மக்கள் தொகை காலப்போக்கில் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. ஒரு தொகுதியில் மக்கள் தொகை அதிகமாகவும், மற்றொரு தொகுதியில் குறைவாகவும் இருந்தால், வாக்காளர்களின் பிரதிநிதித்துவம் சமமாக இருக்காது. இதனை சரி செய்து, 'ஒரு ஓட்டு, ஒரு மதிப்பு' என்ற கொள்கையை நிலைநாட்ட தொகுதிகளின் எல்லைகளைப் பிரிப்பதே தொகுதி மறுவரையறை.
தற்போதைய தொகுதி மறுவரையறை 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பை மையப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், கொரோனா காரணமாக 2021ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவில்லை. எனவே, தற்போது நடைமுறைப்படுத்தப்பட உள்ள தொகுதி மறுவரையறை, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் செய்யப்படும். லோக்சபா மொத்த இடங்களின் எண்ணிக்கை 543ல் இருந்து 850 ஆக அதிகரிக்கப்பட உள்ளது.
முதன்முதலில் எப்போது அமல்படுத்தப்பட்டது?
இந்தியாவில் முதன்முதலில் தொகுதி மறுவரையறை ஆணையம் 1952ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 1951ம் ஆண்டு எடுக்கப்பட்ட சுதந்திர இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், 1952ல் தொகுதிகள் முதன்முதலாக மறுவரையறை செய்யப்பட்டன.
அதன்பிறகு 1962, 1972, 2002 என இதுவரை மொத்தம் 4 முறை தொகுதி மறுவரையறை ஆணையங்கள் அமைக்கப்பட்டு, தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதில், 2002ல் நடந்த மறுவரையறையில் தொகுதிகளின் எல்லைகள் மட்டுமே மாற்றப்பட்டன, ஆனால் மொத்த எம்.பி.,க்களின் எண்ணிக்கை (543) அதிகரிக்கப்படவில்லை.
* ஒரு மாநிலத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் ஏறக்குறைய சமமான எண்ணிக்கையிலான வாக்காளர்கள் இருக்குமாறு எல்லைகள் மாற்றப்படுகின்றன. இதன்மூலம் அனைத்து வாக்காளர்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்கிறது. ஒரு எம்.பி அல்லது எம்.எல்.ஏ கையாளும் மக்கள் தொகை அளவு கிட்டத்தட்ட சீராக இருக்கும்.
* எல்லைகளைப் பிரிக்கும்போது மாவட்ட எல்லைகள், ஆறுகள், மலைகள் போன்ற இயற்கை அமைப்புகள் மற்றும் தகவல் தொடர்பு வசதிகளும் கருத்தில் கொள்ளப்படுகின்றன.
* எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு இடங்களை, அவர்களின் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக உள்ள பகுதிகளுக்கு ஏற்ப இந்த ஆணையம் ஒதுக்குகிறது. இதனால் மக்கள் தொகை மாற்றத்திற்கு ஏற்ப தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான தொகுதிகள் சரியாக அடையாளம் காணப்பட்டு ஒதுக்கப்படுவதால், அவர்களுக்கான அரசியல் அங்கீகாரம் உறுதி செய்யப்படுகிறது.
* 'ஒவ்வொரு ஓட்டிற்கும் சமமான மதிப்பு' என்ற கோட்பாடு உண்மையாக்கப்படுகிறது. இதன் மூலம் ஜனநாயகம் மேலும் வலுவடைகிறது.
* ஒரு தொகுதி பெரியதாக இருக்கும்போது, மக்கள் பிரதிநிதியால் அனைத்து இடங்களுக்கும் சென்று குறைகளைக் கேட்பது கடினம். எல்லைகள் முறைப்படுத்தப்படும்போது நிர்வாகச் செயல்பாடுகள் எளிதாகின்றன.
* ஒரு எம்.பி அல்லது எம்.எல்.ஏ கையாளும் வாக்காளர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வரும்போது, அந்தப் பிரதிநிதிக்கும் மக்களுக்கும் இடையேயான தொடர்பு மற்றும் அணுகல் (Accessibility) எளிதாகிறது. மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
* மக்கள் தொகைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு மற்றும் அரசுத் திட்டங்கள் மக்களைச் சென்றடைவதை இது உறுதி செய்கிறது.
* ஒவ்வொரு எம்பிக்கும் MPLADS (Member of Parliament Local Area Development Scheme) நிதி ஒதுக்கப்படுகிறது. அதிக உறுப்பினர்கள் இருந்தால், குறிப்பிட்ட ஒரு மாவட்டத்திற்குள் அதிகப்படியான மத்திய அரசு நிதி வந்து சேரும்.
* அபிவிருத்திப் பணிகளை கண்காணிப்பது மற்றும் செயல்படுத்துவது சிறிய பரப்பளவில் எளிதாக இருக்கும்.
* எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, சமுதாயத்தின் பல்வேறு பிரிவினர், சிறிய கட்சிகள் மற்றும் சிறுபான்மையினருக்கு பார்லிமென்டில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.
* விவாதங்களின் தரம்: பார்லிமென்ட் நிலைக்குழுக்களில் (Standing Committees) அதிக உறுப்பினர்கள் பங்கேற்க முடியும், இது சட்டங்களை இன்னும் நுணுக்கமாக ஆய்வு செய்ய உதவும்.
* பெரிய தொகுதிகளை நிர்வகிப்பதை விட, சிறிய தொகுதிகளை நிர்வகிப்பது ஒரு மக்கள் பிரதிநிதிக்கு எளிதானது. இது அரசுத் திட்டங்கள் கடைக்கோடி மனிதனுக்கும் சென்றடைவதை உறுதி செய்ய உதவும்.
* நிலைமை இப்படி இருக்க, தமிழ்நாட்டில் திமுகவும் அக்கட்சியின் பேச்சைக் கேட்டு அதன் கூட்டணி கட்சிகளும் தொகுதி மறுவரையறையை எதிர்ப்பது என்பது மக்களை ஏமாற்றும் அரசியல். மக்களை அறியாமையிலேயே வைத்திருக்க திமுக விரும்புகிறது. இந்த உண்மையை மக்கள் தான் புரிந்துகொள்ள வேண்டும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan