பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு
16 சித்திரை 2026 வியாழன் 15:40 | பார்வைகள் : 1533
பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அமீர் ஹம்சா (Ameer Hamza ) மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் லாகூரில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு உள்ள ஒரு கட்டிடத்தின் வெளியே இருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் அவரை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
காயமடைந்த நிலையில் இரத்த வெள்ளத்தில் விழுந்த அமீர் ஹம்சா உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமீர் ஹம்சா, 1980களில் ஹாஃபிஸ் சயீத் உடன் இணைந்து லஷ்கர்-இ-தொய்பா என்ற அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும், இந்தியாவில் இடம்பெற்ற பல தாக்குதல்கள் உட்பட பல்வேறு பயங்கரவாதச் செயல்களுடன் அவர் தொடர்புடையவர் என குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்புகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. இந்த சம்பவத்தின் பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan