துருக்கி பாடசாலையில் துப்பாக்கிச் சூடு - 9 பேர் பலி
16 சித்திரை 2026 வியாழன் 08:34 | பார்வைகள் : 1364
தென்கிழக்கு துருக்கியில் உள்ள ஒரு பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.
எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவனே குறித்த துப்பாக்கிச் சூட்டை வகுப்பறையில் நடத்தியுள்ளான், மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தியவன் தற்கொலை செய்துகொண்டான்.
மேலும் 13 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, அவர்களில் ஆறு பேர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர், அவர்களில் மூன்று பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
இதற்கிடையில், தென்கிழக்கு துருக்கியில் உள்ள ஒரு பாடசாலையில் செவ்வாய்க்கிழமை (14) அதே பாடசாலையின் முன்னாள் மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயமடைந்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவன் அதே பாடசாலையின் 18 வயதான முன்னாள் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan