ஹோர்முஸ் நீரிணை ஒரு சர்வதேச கடல் வழிப்பாதை - சீனா விடுத்த கோரிக்கை!
16 சித்திரை 2026 வியாழன் 08:26 | பார்வைகள் : 1533
ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) வழமையான கப்பல் போக்குவரத்தை மீளக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சீனா ஈரானிடம் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவ்ல்கள் வெளியாகியுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சர் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஆகியோருக்கு இடையில் நேற்று இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹோர்முஸ் நீரிணை ஒரு சர்வதேச கடல் வழிப்பாதை என்பதால், அங்கு கப்பல் போக்குவரத்தின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் சீனா வலியுறுத்தியுள்ளது.
நீரிணையை அண்டியுள்ள நாடு என்ற ரீதியில் ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் சட்டபூர்வமான உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் எனவும் சீனா குறிப்பிட்டுள்ளது.
பிராந்தியத்தில் அமைதி மற்றும் போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு சீனா தொடர்ந்தும் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்குவது தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan