Paristamil Navigation Paristamil advert login

ஈரானுக்கு இராணுவ உதவி – சீனா திட்டவட்ட மறுப்பு, அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

ஈரானுக்கு இராணுவ உதவி – சீனா திட்டவட்ட மறுப்பு, அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

15 சித்திரை 2026 புதன் 15:29 | பார்வைகள் : 351


ஈரான் தொடர்பான மத்திய கிழக்கு பதற்றம் நீடித்து வரும் நிலையில், சீன அரசு முக்கிய விளக்கமொன்றை வெளியிட்டுள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியன இணைந்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஆரம்பித்த தாக்குதல்களுக்கு பின்னர், ஒரு மாத கால பதற்றத்துக்குப் பின் தற்போது இரண்டு வார தற்காலிக போர்நிறுத்தம் அமுலில் உள்ளது.

ஈரானுக்கு சீனா இராணுவ உதவி வழங்குவதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனால் புதிய சர்ச்சை உருவானது.

ஆனால், இந்த தகவல்களை சீன அரசு முழுமையாக மறுத்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், தனது சமூக வலைதளமான எக்ஸில் வெளியிட்ட பதிவில், “ஈரானுக்கு சீனா இராணுவ உதவி வழங்குகிறது என்ற செய்திகள் அனைத்தும் முற்றிலும் தவறானவை மற்றும் சித்தரிக்கப்பட்டவை” என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்கா, சீனாவிற்கு எதிராக வரிகளை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால், அதற்கு தக்க பதிலடி வழங்கப்படும் எனவும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு, ஏற்கனவே பதற்றமான மத்திய கிழக்கு சூழ்நிலையில் புதிய அரசியல் மற்றும் பொருளாதார மோதல்களுக்கு வழிவகுக்கும் வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்

 

எழுத்துரு விளம்பரங்கள்