தொகுதி வரையறை எனும் பெயரில் தமிழகத்தை சீர்குலைத்தவர் கருணாநிதி: சீமான்
15 சித்திரை 2026 புதன் 14:56 | பார்வைகள் : 320
தொகுதி வரையறை எனும் பெயரில் தமிழகத்தை சீர்குலைத்ததே கருணாநிதி தான், என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டினார்.
சிவகங்கையில், பிரசாரத்தில் அவர் பேசியதாவது:
தொகுதி வரையறை என்ற பெயரில், தமிழகத்தை சீர்குலைத்ததே முன்னாள் முதல்வர் கருணாநிதி தான். புதுக்கோட்டைக்கு, ஒரு லோக்சபா தொகுதி கூட இல்லை. இளையான்குடி தொகுதியை, மானாமதுரையுடன் சேர்த்தது யார். மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு லோக்சபா தொகுதி வேண்டும்.
மத்திய அரசையே, தி.மு.க., குறை சொல்லிக்கொண்டு இருப்பதை நான் இழிவாக பார்க்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த தி.மு.க., செய்ததை சொல்லி ஓட்டு கேட்க வேண்டும். எதையுமே செய்யாததால், ஓட்டு கேட்க வரும்போது மத்திய அரசின் மேல் பழி போடுகின்றனர். நிதி கொடுக்கவில்லை என்றால் எல்லா கட்சிகளையும் இணைத்து தி.மு.க., போராட்டம் நடத்தி இருக்கலாம்.
நிதியே இல்லாமல், ஒவ்வொருவருக்கும் ரூ.5000 வீதம் வங்கியில் வரவு வைக்க சொன்னது யார். மகளிர் உரிமை தொகை கேட்டது யார். பிள்ளைகள் படிக்க போகும்போது ரூ.1000 வேண்டும் என்று கேட்டார்களா. ஆசிரியர்கள் சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்துகிறார்கள். அதை கொடுக்க மறுக்கிறார்கள். ஆனால், இலவசத்தை அள்ளி கொடுக்கிறார்கள்.
திமுக ஆட்சியில், ரூ.10.5 லட்சம் கோடி கடன் பெற்று நிறைவேற்றிய நலத்திட்டங்கள் என்னவென்று கேட்டால் பதில் இல்லை. காங் தலைமையிலான மத்திய அரசில் திமுக இருந்தபோது, கச்சத்தீவை மீட்டார்களா. தன் அணுகுமுறையில், பாஜ தோற்றுப் போனதால் திராவிட கட்சிகளின் அணுகுமுறையை பின்பற்ற தொடங்கி விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan