முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம்: இபிஎஸ்
15 சித்திரை 2026 புதன் 08:57 | பார்வைகள் : 1126
மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதை முதல்வர் ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவருக்கு தோல்வி பயம் என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.
பார்லிமென்டிலும், சட்டசபைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்காக வரும் 16 ம் தேதி பார்லிமென்டின் சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தை பாதிக்கும்படியோ, வட மாநிலங்களுக்கு அரசியல் வலிமை கூட்டும்படியோ தொகுதி மறுவரையறை நடந்தால் சும்மா இருக்க மாட்டோம் என வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் நிருபர்களிடம் கூறியதாவது: பல ஆண்டுகளாக எதிர்பார்த்த மகளிர் இட ஒதுக்கீடு இன்று நிறைவேறும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால், ஊடகம் வாயிலாக வெளிப்படுத்துகின்றனர். தோல்வி பயம் காரணமாக இந்தக் கருத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
மகளிர் இட ஒதுக்கீடு குறித்து பெண்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கின்றனர். இந்த தருணத்தில் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு இபிஎஸ் கூறினார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan