துருக்கி பாடசாலையில் துப்பாக்கிச்சூடு - பெரும் பரபரப்பு
14 சித்திரை 2026 செவ்வாய் 14:30 | பார்வைகள் : 1180
துருக்கி நாட்டின் பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை தென்கிழக்கு துருக்கியில் உள்ள தொழிற்கல்வி பாடசாலையில் பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த சம்பவத்தில் குறைந்தது 16 பேர் வரை காயமடைந்துள்ள நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
இந்த பயங்கர சம்பவம் Sanliufa மாகாணத்தின் siverek மாவட்டத்தில் உள்ள பாடசாலையில் நடைபெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய 18 வயது இளைஞர் அந்த பள்ளியின் முன்னாள் மாணவர் என்றும், shotgun ரக துப்பாக்கியுடன் பள்ளிக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக சுட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக துருக்கியின் NTV செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
பொலிஸார் இது தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan