ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கிய 15 இந்திய எண்ணெய் கப்பல்கள்
14 சித்திரை 2026 செவ்வாய் 09:10 | பார்வைகள் : 356
ஹார்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டுள்ள நிலையில் கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு ஏற்றி வந்த நம் நாட்டைச் சேர்ந்த, 15 கப்பல்கள் அப்பகுதியில் சிக்கியுள்ளன.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், சமீபத்தில் நடந்த அமெரிக்கா - ஈரான் இடையே போர்நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வியை தழுவியது.
இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளன. இதன் ஒரு பகுதியாக கச்சா எண்ணெய் போக்கு வரத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி, ஈரானிய துறைமுகங்கள் உள்ளிட்ட பகுதிகளை அமெரிக்க கடற்படை முற்றுகை இட்டுள்ளது.
அந்த வழியாக சரக்கு கப்பல்கள் போக்குவரத்து அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் ஏற்றி வரும் பல சரக்கு கப்பல்களின் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதில் கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு, திரவமயமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உள்ளிட்ட டேங்கர்கள், கொள்கலன் கப்பல்கள், துார்வாரும் கப்பல், ரசாயன டேங்கர் உட்பட, நம் நாட்டின் 15 கப்பல்கள் அப்பகுதியில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
நம் நாட்டின் தேசியக்கொடியுடன் வலம் வந்த இந்தக் கப்பல்கள் அனைத்தும் ஹார்முஸ் ஜலசந்தியின் மேற்குப் பகுதியில் நிறுத்தப்பட்டுன. அவை எவ்வித இடையூறும் இன்றி கடக்க நம் கடற்படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கடல்வழி போக்குவரத்தைக் கண்காணிக்கும் அதிகாரிகள், அப்பகுதியில் 25 இந்திய கப்பல்களில், 10 கப்பல்கள் ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஒரு கப்பல் இருக்காது!
ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவின் முற்றுகை தொடர்ந்தால், பிராந்தியத்தில் உள்ள அதன் நட்பு நாடுகளின் எந்தத் துறைமுகமும் பாதுகாப்பாக இருக்காது என்று ஈரான் எச்சரித்துள்ளது. பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் கடற் பகுதியில் உள்ளதுபோன்ற பாதுகாப்பு அனைத்து நாடுகளுக்கும் சமமாகப் பொருந்த வேண்டும் என்று ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்க கப்பல்களோ அல்லது எதிரி கப்பல்களோ அருகில் வந்தால் ஆபத்தான சுழலில் சிக்க வைக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
போக்குவரத்து நின்றுவிட்டது!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானின் அனைத்து துறைமுகங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளுக்கு முழு கப்பல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து நின்றுவிட்டதாக சில உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan