Paristamil Navigation Paristamil advert login

இரவு நேரத்தில் அத்துமீறிய 98 ரஷ்ய ட்ரோன்கள்- உக்ரைன் வான் பாதுகாப்பு படை அதிரடி

இரவு நேரத்தில் அத்துமீறிய 98 ரஷ்ய ட்ரோன்கள்- உக்ரைன் வான் பாதுகாப்பு படை அதிரடி

13 சித்திரை 2026 திங்கள் 10:56 | பார்வைகள் : 297


உக்ரைன் மீது மீண்டும் இரவு நேர ட்ரோன் தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை உக்ரைனிய விமான படை வெளியிட்ட அறிக்கையில் ரஷ்யா இரவோடு இரவாக கிட்டத்தட்ட 98 ட்ரோன்களை பயன்படுத்தி ஒருங்கிணைந்த வான்வழி தாக்குதலை நடத்தி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

இந்த தாக்குதல்கள் ரஷ்யாவின் பிரையன்ஸ்க், குர்ஸ்க், மில்லெரோவா ஆகிய பகுதியில் இருந்தும், ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவின் குவார்டிஸ்கோ பகுதியில் இருந்தும் முன்னெடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய படைகளின் ஒருங்கிணைந்த இந்த வான்வழித் தாக்குதல்களை இரவு முழுவதும் போராடி உக்ரைனிய வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக முறியடித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 87 ட்ரோன்கள் உக்ரைனிய வான் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள ட்ரோன்கள் பாதுகாப்பு வளையங்களை தாண்டி சென்று குறிவைக்கப்பட்ட இலக்குகளை அடைந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

எழுத்துரு விளம்பரங்கள்