Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் "மனிதகுலத்தின் சாபம் - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் சாடல்

இஸ்ரேல் "மனிதகுலத்தின் சாபம் - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் சாடல்

11 சித்திரை 2026 சனி 12:52 | பார்வைகள் : 278


பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் இஸ்ரேலை "மனிதகுலத்தின் சாபம்" என்று கூறியதுடன், லெபனான் முழுவதும் இனப்படுகொலை செய்யும் தீய சக்தியாக இஸ்ரேலை குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், இஸ்ரேல் ஒரு தீய சக்தி. மனித குலத்துக்கேயான சாபக்கேடு. இஸ்லாமாபாத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் வேளையில், லெபனானில் இனப்படுகொலை சம்பவங்கள் இடம்பெறுகின்றன” என்று பதிவிட்டுள்ளார்.

பொதுமக்களும் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்படுகிறார்கள் எனக் குறிப்பிட்ட அவர், முதலில் காசா, பின்னர் ஈரான், இப்போது லெபனான். இரத்தக்கொதிப்பு தங்குதடையின்றி தொடர்கிறது” என்று கூறியுள்ளார்.

“ஐரோப்பிய யூதர்களை ஒழிப்பதற்காக பாலஸ்தீனிய மண்ணில் புற்றுநோய் போன்ற இஸ்ரேல் அரசை உருவாக்கியவர்கள் நரகத்தில் எரியவேண்டும்”  என்று தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (7) அமெரிக்காவும் ஈரானும் போர்நிறுத்தம் கடைபிடிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளை பாகிஸ்தான் மத்தியஸ்தம் வகித்து நடத்தி வரும் நிலையில், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரமடைந்திருக்கின்றன.

இதனை கண்டிக்கும் வகையிலேயே பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் இவ்விதமாக இஸ்ரேலை சாடியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையின்போது பாகிஸ்தானிய மத்தியஸ்தர்களும் தெஹ்ரானும், இந்த போர்நிறுத்தம் லெபனானையும் உள்ளடக்கியது என்று கூறியபோதிலும் அமெரிக்காவின் வொஷிங்டனும் இஸ்ரேலின் டெல் அவிவ்வும் அதை மறுத்தன.

இதனையடுத்து, இஸ்ரேல் இராணுவம் புதன்கிழமை (8) முதல் லெபனான் முழுவதிலும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குறைந்தது 303 பேர் உயிரிழந்ததோடு, 1,150 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும், லெபனான் சுகாதார அமைச்சானது, மார்ச் 2ஆம் திகதி முதல் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 1,888 பேர் உயிரிழந்ததோடு, 6,092 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 

எழுத்துரு விளம்பரங்கள்