Paristamil Navigation Paristamil advert login

ரியான் பராக் புகைபிடித்த விவகாரம் - தண்டனையை அறிவித்த பிசிசிஐ

ரியான் பராக் புகைபிடித்த விவகாரம் - தண்டனையை அறிவித்த பிசிசிஐ

30 சித்திரை 2026 வியாழன் 16:43 | பார்வைகள் : 264


ரியான் பராக் மின்னணு சிகெரெட் பிடித்த விவகாரத்தில் பிசிசிஐ தண்டனையை அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, வீரர்களின் ஓய்வறையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அணித்தலைவர் ரியான் பராக், மின்னணு சிகெரெட் புகைப்பிடிக்கும் காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பானது.

இந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ரியான் பராக் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஐபிஎல் விதிகளின் படி, குறிப்பிட்ட பகுதிகள் தவிர்த்து, உடைமாற்றும் அறை மற்றும் மைதானத்தின் பிற பகுதிகளில் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. 
இந்நிலையில், ஐபிஎல் நடத்தை விதிகளின் நிலை 1-ஐ மீறியதற்காக, ரியான் பராக்கிற்கு போட்டி ஊதியத்தில் 25% அபராதமும், ஒரு தகுதிக்குறைப்புப் புள்ளியும் விதிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டின் மின்னணு சிகரெட் தடைச் சட்டத்தின் கீழ், நாட்டில் வேப்ஸ் மற்றும் மின்னணு சிகரெட்டுகளின் உற்பத்தி, விற்பனை, கொள்முதல், இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் விளம்பரம் ஆகியவை முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளன.

சட்டத்தை மீறினால், பெரும் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை உள்ளிட்ட கடுமையான விளைவுகள் ஏற்படக்கூடும்.