வடக்கு காசா பகுதியின் சுரங்கப்பாதையை தகர்த்த இஸ்ரேல் இராணுவம்
28 சித்திரை 2026 செவ்வாய் 11:27 | பார்வைகள் : 1555
ஜெருசலேம், வடக்கு காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரால் பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 14 கிலோமீட்டர் நீளமுள்ள நிலத்தடி சுரங்கப்பாதைகளை அழித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) அறிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் வடக்கு பிரிகேட் மற்றும் 'யஹலோம்' (Yahalam) சிறப்புப் பொறியியல் பிரிவு இணைந்து கடந்த சில மாதங்களாக காசாவின் வடக்குப்பகுதி மற்றும் பெய்ட் ஹனூன் (Beit Hanoun) பகுதிகளில் தேடுதல் வேட்டையை நடத்தியநிலையில் இந்தச் சுரங்கப்பாதைகளைக் கண்டறிந்து அழித்தன.
அழிக்கப்பட்ட சுரங்கப்பாதைகளுக்குள் ஏராளமான ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காசாவில் சுரங்கப்பாதைகள் அழிக்கப்படும் அதே வேளையில், மறுபுறம் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகளை நோக்கி இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan