CAF உதவித் தொகைகள் உயர்வு – புதிய தொகைகள் விவரம்!!
27 சித்திரை 2026 திங்கள் 20:29 | பார்வைகள் : 564
CAF வழங்கும் சமூக நலத்திட்ட உதவிகள் 0.8% உயர்த்தப்பட்டுள்ளன. இந்த உயர்வு மே 5 முதல் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும். பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், இந்த மாற்றம் பயனாளர்களுக்கு குறைந்த அளவிலான நிவாரணமாக இருக்கும்.
RSA (குறைந்த வருமான உதவி) புதிய உதவி தொகைகள்:
- தனிநபர் (குழந்தைகள் இல்லாமல்): 651.69 யூரோக்கள் (+5)
- தனிநபர்+ஒரு குழந்தை: 977.54 யூரோக்கள் (+8)
- தனிநபர்+ இரண்டு குழந்தைகள்: 1,173.05 யூரோக்கள் (+10)
- கூடுதல் ஒவ்வொரு குழந்தைக்கும்: +260.68 யூரோக்கள்
- தம்பதிகள் (குழந்தைகள் இல்லாமல்): 977.54 யூரோக்கள்
- தம்பதிகள் + 2 குழந்தைகள் இருந்தால்: 1,368.55 யூரோக்கள் (+12) கிடைக்கும்.
குடும்பத் தொகைகள் (Allocations familiales):
2 குழந்தைகள் இருக்கும் குடும்பத்திற்கு:
- 79,980 யூரோக்கள் கீழ் வருமானம் பெறும் குடும்பத்திற்கு : 152.26 யூரோக்கள்
- 79,980 முதல் 106,604 யூரோக்கள் வரை வருமானம் பெறும் குடும்பத்திற்கு: 76.13 யூரோக்கள்
- 106,604 யூரோக்களுக்கு மேல் வருமானம் பெறும் குடும்பத்திற்கு : 38.07 யூரோக்கள் கிடைக்கும்.
3 குழந்தைகள் இருக்கும் குடும்பத்திற்கு:
- 86,644 யூரோக்கள் கீழ் வருமானம் பெறும் குடும்பத்திற்கு: 347.32 யூரோக்களும்
- 86,644 முதல் 113,268 யூரோக்கள் வரை வருமானம் பெறும் குடும்பத்திற்கு: 173.66 யூரோக்களும்
- 113,268 யூரோக்களுக்கு மேல் வருமானம் பெறும் குடும்பத்திற்கு: 86.83 யூரோக்களும்
4 குழந்தைகள் இருக்கும் குடும்பத்திற்கு:
- 93,308 யூரோக்களுக்கு கீழ் வருமானம் பெறும் குடும்பத்திற்கு: 542.39 யூரோக்களும்
- 93,308 முதல் 119,932 யூரோக்கள் வரை வருமானம் பெறும் குடும்பத்திற்கு: 271.20 யூரோக்களும்
- 119,932 யூரோக்களுக்கு மேல் வருமானம் பெறும் குடும்பத்திற்கு: 135.60 யூரோக்களும் கிடைக்கும்.
Prime d’activité (செயல்பாட்டு போனஸ்):
தனிநபர்: 638.28 யூரோக்கள் (சுமார் 5 யூரோ க்கள் உயர்வு)
குறைந்த வருமான பெறும் தொழிலாளர்களுக்கு கூடுதல் போனஸ்: மாதம் 50 யூரோக்கள் வரை வழங்கப்படும்.
AAH (மாற்றுத் திறனாளி உதவி):
அதிகபட்சம்: 1,041.59 யூரோக்கள் (+8.27)
ARS (பாசாலை தொடக்க உதவி):
- 6–10 வயது: 429.01 யூரோக்கள் (+3.41)
- 11–14 வயது: 452.67 யூரோக்கள் (+3.58)
- 15–18 வயது: 468.36 யூரோக்கள் (+3.71)
இந்த அனைத்து உதவிகளும் ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதி (முந்தைய மாதத்திற்கான தொகையாக) வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan