கார்லிக் பட்டர் சிக்கன்..
27 சித்திரை 2026 திங்கள் 15:15 | பார்வைகள் : 163
அசைவப் பிரியர்களுக்கு சிக்கன் என்பது வெறும் உணவு மட்டுமல்ல, அது ஒரு உணர்வு. எனவே, ஹோட்டல், உணவகம், கூட்டம், விழா, விருந்து போன்றவற்றில் அசைவ விருந்து ஏற்பாடு செய்யப்படும்போது, அங்கே பலவிதமான சிக்கன் உணவுகளைக் காணலாம். குறிப்பாக, சிக்கன் ஸ்டார்ட்டர்ஸ் சுவை அலாதியாக இருக்கும். மீண்டும் மீண்டும் சாப்பிடத்தோன்றும்.
கார்லிக் பட்டர் சிக்கனும் அத்தகைய சிக்கன் ஸ்டார்ட்டர்ஸில் ஒன்றாகும், இது சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். வீட்டிற்கு வந்ததும் அந்த சுவை நாவை விட்டு நீங்காது. அதை செய்வது என்பது அவ்வளவு கடினமல்ல.. வீட்டிலேயே நீங்கள் விருப்பம் போல் கார்லிக் பட்டர் சிக்கன்' செய்து சாப்பிடத் தயாரா
தேவையான பொருட்கள் :
எலும்பில்லாத கோழி – ½ கிலோ
பொடியாக நறுக்கிய பூண்டு – 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மைதா மாவு – 2 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
கொத்தமல்லி - சிறிதளவு
எலுமிச்சை சாறு – சிறிதளவு
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் சிக்கனை நன்றாகக் கழுவவும். இப்போது சிக்கனை மற்றொரு பாத்திரத்தில் போட்டு, உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
பிறகு, சிக்கன் மீது மைதா மாவைத் தூவி, எல்லாத் துண்டுகளையும் சமமாக ஊற வைக்கவும். இது சிக்கன் துண்டுகள் வெளிப்புறம் மொறுமொறுப்பாகவும், உட்புறம் சாறுடன் இருக்கவும் உதவும்.
இப்போது ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து சூடாக்கவும். மசாலா தடவிய சிக்கனை சேர்த்து, இருபுறமும் பொன்னிறமாகும் வரை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
பிறகு, அதே வாணலியில் மீதமுள்ள வெண்ணெயைச் சேர்த்து, பொடியாக நறுக்கிய பூண்டை வதக்கவும். பூண்டின் பச்சை வாசனை மறைந்து, ஒரு நல்ல நறுமணம் வரும்போது, சிறிது தண்ணீர் சேர்த்து அது ஒரு சாஸ் பதத்திற்கு வரும் வரை சமைக்கவும்.
பிறகு, முன்பே வறுத்த சிக்கனை இந்த பூண்டு சாஸில் சேர்த்து 2-3 நிமிடங்கள் நன்றாகக் கலக்கவும். இறுதியாக, எலுமிச்சை சாறு மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவினால், சுவையான 'கார்லிக் பட்டர் சிக்கன்' சாப்பிடத் தயாராகிவிடும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan