ஒரு வகுப்பு மூடப்படுவதை எதிர்த்து, நகர முதல்வர் பொம்மைகளுடன்..
27 சித்திரை 2026 திங்கள் 15:04 | பார்வைகள் : 3336
Breil‑sur‑Roya (Alpes‑Maritimes) நகரின் நகர முதல்வர், ஒரு மழலையர் வகுப்பு மூடப்படுவதை எதிர்த்து, தனது முழு நகரசபையையும் கிராமத்தின் மழலையர் பள்ளியில் மாணவர்களாக பதிவு செய்துள்ளார். அவர்கள் அனைவரும் பை மற்றும் பொம்மைகளுடன் ( doudou) உடன் பள்ளிக்கு வர உள்ளனர்.
Breil‑sur‑Roya மழலையர் பள்ளி, வழக்கமான மாணவர்களல்லாத «புதிய மாணவர்களை» வரவேற்க உள்ளது.
«காலை 8 மணிக்கு, நகரசபையின் மற்ற 18 உறுப்பினர்களுடன், நாங்கள் அனைவரும் பை மற்றும் நமது doudou உடன் பள்ளிக்கு வந்து, மூன்று மழலையர் வகுப்புகளில் ஒன்றில் அமர்வோம்.» என நகர முதல்வர் Sébastien தெரிவித்துள்ளார்
அவரின் நோக்கம்:
«50 குழந்தைகளை இரண்டு வகுப்புகளில் மட்டும் சேர்த்தால் என்ன நடக்கும் என்பதை காட்டுவது.»
Alex புயலால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமம்
2,400 மக்கள் வசிக்கும் Breil‑sur‑Roya, 2020 ஒக்டோபரில் ஏற்பட்ட Alex புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றாகும். அந்த புயல்:
10 உயிரிழப்புகள், 8 காணாமல் போனவர்கள், Roya, Tinée, Vésubie பள்ளத்தாக்குகளில் பெரும் சேதம் ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு, மழலையர் மற்றும் தொடக்க வகுப்புகளை ஒன்றிணைத்து ஒரே ஆரம்பப் பள்ளியாக மாற்றும் («primarisation») ஒப்பந்தத்தின் போது, கல்வி நிர்வாகம் எந்த வகுப்பும் மூடப்படாது. என்று உறுதியளித்ததாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும் «எண்ணிக்கை குறைந்திருந்தால் புரிந்துகொள்ளலாம். ஆனால் 2021‑இல் 135 குழந்தைகள் இருந்த நிலையில், அடுத்த கல்வியாண்டில் 161 குழந்தைகள் இருப்பார்கள்.» என நகர முதல்வர் Sébastien தெரிவித்துள்ளா
🔥 இன்றைய சிறப்பு சலுகை
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan