ஜனநாயகன் படத்திற்கு சென்சார் கிடைக்குமா?
27 சித்திரை 2026 திங்கள் 14:32 | பார்வைகள் : 1643
கே.வி.என் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து ஹெச்.வினோத் இயக்கி விஜய் நடித்த திரைப்படம் ஜனநாயகன். விஜய் அரசியலுக்கு சென்று விட்டதால் இதுதான் என் கடைசி படம் என விஜய் அறிவித்திருந்தார். இந்த படம் ஒரு கடந்த ஜனவரி 9ம்ம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் ரிலீசாகவில்லை.
தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் எந்த முன்னேற்றமும் ஏற்படாத வழக்கை வாபஸ் பெற்று விட்டு படத்தில் மறுதனிக்கைக்கு விண்ணப்பித்தார்..
ஆனால் சமீபத்தில் படம் பார்க்க அதிகாரிகள் ஏப்ரல் 27ம் தேதியான இன்று தங்களின் முடிவை சொல்வதாக கூறியிருந்தனர். எனவே படத்திற்கு சென்சார் கிடைக்குமா? கிடைக்காதா? அல்லது இன்னும் காலதாமதம் ஆகுமா? என்பது இன்று இரவுக்குள் தெரிந்துவிடும் என சொல்லப்படுகிறது.
அநேகமாக சான்றிதழ் உடனே கிடைத்து விட்டால் இந்த மாத இறுதி அல்லது மே முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் ஜனநாயகன் வெளியாகும் என கணிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan