Paristamil Navigation Paristamil advert login

502 ரன் குவித்த சஸ்செக்ஸ் - பதிலடியாக 511 ரன் எடுத்த ஜோ ரூட் அணி

502 ரன் குவித்த சஸ்செக்ஸ் - பதிலடியாக 511 ரன் எடுத்த ஜோ ரூட் அணி

27 சித்திரை 2026 திங்கள் 14:56 | பார்வைகள் : 135


கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் ஜோ ரூட் 4 ஓட்டங்களில் சதத்தை தவறவிட்டார்.

லீட்ஸில் சஸ்செக்ஸ் மற்றும் யோர்க்ஷிரே அணிகளுக்கு இடையிலான கவுண்டி சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.

முதல் இன்னிங்ஸை ஆடிய சஸ்செக்ஸ் அணியில் ஜான் சிம்ப்சன் 136 ஓட்டங்களும், டாம் பிரைஸ் 93 ஓட்டங்களும் எடுத்தனர்.

அதிரடி காட்டிய டாம் ஹைன்ஸ் 77 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்கள் எடுத்தார். ஜேம்ஸ் கோல்ஸ் 47 ஓட்டங்கள் எடுத்தார்.

இதன்மூலம் சஸ்செக்ஸ் அணி 502 ஓட்டங்கள் குவித்தது. ஜேக் ஒயிட் 4 விக்கெட்டுகளும், ஜார்ஜ் ஹில் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

பின்னர் யோர்க்ஷிரே முதல் இன்னிங்ஸைத் தொடங்க, பின்லே பீன் மற்றும் சாம் ஒயிட்மேன் வலுவான கூட்டணி அமைத்தனர்.

இருவரும் சதம் விளாச, இந்தக் கூட்டணி இரண்டாவது விக்கெட்டுக்கு 182 ஓட்டங்கள் குவித்தது. அடுத்து வந்த ஜோ ரூட் (Joe Root) அதிரடி ஆட்டத்தில் மிரட்டினார்.

மொத்தம் 127 பந்துகளை எதிர்கொண்ட அவர் 96 ஓட்டங்களில் (12 பவுண்டரிகள்) இருந்தபோது க்ரோகோம்பே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் மேத்யூ ரேவிஸ் 42 ஓட்டங்களும், ஜார்ஜ் ஹில் 50 ஓட்டங்களும் எடுக்க, யோர்க்ஷிரே அணி 511 குவித்து ஆல்அவுட் ஆனது. ஹென்றி க்ரோகோம்பே, ஜேம்ஸ் கோல்ஸ் தலா 3 விக்கெட்டுகளும், ஃபின் ஹட்சன் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.