ஃபா கப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய செல்ஸி
27 சித்திரை 2026 திங்கள் 13:52 | பார்வைகள் : 1389
ஃபா கப் தொடரின் அரையிறுதியில் செல்ஸி அணி 1-0 என்ற கோல் கணக்கில் லீட்ஸை வீழ்த்தியது.
லீட்ஸ் யுனைடெட் மற்றும் செல்ஸி அணிகளுக்கு இடையிலான FA Cup அரையிறுதிப் போட்டி லண்டனில் நடந்தது.
ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் செல்ஸி வீரர் என்ஸோ பெர்னாண்டஸ் (Enzo Fernandez) தலையால் முட்டி கோல் அடித்தார்.
அதற்கு லீட்ஸ் அணியால் பதில் கோல் அடிக்க முடியாததால், முதல் பாதியில் செல்ஸி அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதியில் 47வது நிமிடத்தில் லீட்ஸ் வீரர் ஆன்டன் ஸ்டாக் கிக் செய்த பந்தை, செல்ஸி கோல் கீப்பர் ராபர்ட் சான்செஸ் அபாரமாக செயல்பட்டு தடுத்தார்.
அதேபோல் 58வது நிமிடத்திலும் நேராக வந்த பந்தை கேட்ச் செய்து Save செய்தார். இறுதிவரை லீட்ஸ் அணியால் கோல் அடிக்க முடியாததால், செல்ஸி அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இதனைத் தொடர்ந்து, மே 16ஆம் திகதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி மற்றும் செல்ஸி அணிகள் மோத உள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan