பணியாளர் பற்றாக்குறை, பாதுகாப்பு அச்சம் - சிறைச்சாலைத் துறை அதிகாரிகள் போராட்டம் அறிவிப்பு!!
27 சித்திரை 2026 திங்கள் 08:51 | பார்வைகள் : 1894
தொழிற்சங்களான Ufap-Unsa Justice, CGT-Pénitentiaire மற்றும் SPS-CEA ஆகியவை இணைந்து, ஏப்ரல் மாதம் 27ம் திகதி திங்கட்கிழமை நாடு முழுவதும் சிறைச்சாலைகளை முடக்க நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. இந்த போராட்டத்தின் நோக்கம், சிறை நிர்வாகத்தின் மீது “அழுத்தம் செலுத்தும் சக்தியை” உருவாக்குவதாகும். சிறைச்சாலைத் துறை அதிகாரிகள் தங்கள் நிலைமையை வலியுறுத்தும் விதமாக கடுமையான போராட்டத்திற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக சிறைகளில் அதிகரித்து வரும் கைதிகள் எண்ணிக்கை மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது சுமார் 88,000 கைதிகள் உள்ள நிலையில், இது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டுகிறது.
Ministère de la Justice கணக்கெடுப்பின் படி சிறைகள் 137% வரை நிரம்பியுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான கைதிகள் தரையில் படுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.மேலும், சிறை கண்காணிப்பாளர்கள் மற்றும் பணியாளர்களில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பணியாளர்கள் குறைவால் பாதுகாப்பு மற்றும் பணிநிலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் எச்சரிக்கிறது.
தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் Alexandre Caby குறிப்பிட்டதாவது, சிறைகள் “வெடிக்கும் நிலைக்கு” சென்றுள்ளன என்றும், பணியாளர்கள் மிகுந்த அழுத்தத்தில் பணியாற்றி வருவதாகவும் கூறினார். இதற்கிடையில், Conseil de l'Europe பிரான்ஸ் சிறைகளின் நிலைமை குறித்து கவலை வெளியிட்டுள்ளது.
அதேவேளை, FO Justice இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள மறுத்துள்ளது. அவர்கள் இந்த முடக்கத்தை “அரசியல் நோக்கமுள்ள மற்றும் பயனற்ற நடவடிக்கை” என விமர்சித்துள்ள போதிலும், தற்போதைய பிரச்சினைகள் குறித்தும் ஒப்புக்கொள்கின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan