வோஷிங்டனில் நடந்த துப்பாக்கிச் சூடு,ட்ரம்பிற்கு மக்ரோன் ஆதரவு!
26 சித்திரை 2026 ஞாயிறு 18:11 | பார்வைகள் : 3071
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது வோவாஷிங்டன் D.C.யில் நடைபெற்ற கொலை முயற்சி சம்பவத்திற்குப் பிறகு,
பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மக்ரோன் தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 25 சனிக்கிழமை நடைபெற்ற Wவெள்ளை மாளிகை செய்தியாளர்கள் இரவு விருந்துr நிகழ்வின் போதுஅமெரிக்க அதிபர் மீது துப்பாக்கிச் சூடு நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, எம்மானுவல் மக்ரோன் X தளத்தில்,
«அமெரிக்க அதிபரை குறிவைத்து நேற்று இரவு நடத்தப்பட்ட ஆயுதத் தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது.ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை.
டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு என் முழு ஆதரவை தெரிவிக்கிறேன்.»
எனத் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி நடைபெற்ற Washington Hilton விடுதி மண்டபத்தில்
→ ஒரு நபர் திடீரென நுழைந்து, பல துப்பாக்கிச் சூட்டுகளை நடத்தியுள்ளார். பின்னர் அவர் பாதுகாப்பு படையினரால் கட்டுப்படுத்தப்பட்டார்
புலனாய்வுப் படையயினர்உடனடி நடவடிக்கை
துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டரம்ப் ஆகியோரை
புலனாய்வுப் படையயினர் (Secret Service) மூலம் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்
டொனால்ட் டிரம்ப் பின்னர், பாதுகாப்பு படைகள் வேகமாகவும் துணிச்சலாகவும் செயல்பட்டதாக பாராட்டினார்
“துப்பாக்கி சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டார், நிகழ்ச்சி தொடர வேண்டும் என நான் அறிவுறுத்தினேன்” என்று குறிப்பிட்டார்
சந்தேக நபர் ஏப்ரல் 27 திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகிறார்,
அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன :
வன்முறை குற்றத்தின் போது ஆயுதம் பயன்படுத்துதல்
ஒரு கூட்டாட்சி அதிகாரியை ஆபத்தான ஆயுதத்தால் தாக்குதல்
இந்த சம்பவம் :
அமெரிக்க அதிபரை குறிவைத்து நடந்த கடுமையான பாதுகாப்பு மீறல். பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் வன்முறையை கண்டித்துள்ளன.விசாரணை அமெரிக்க நீதித்துறையால் தொடரப்படுகிறது
🔥 இன்றைய சிறப்பு சலுகை
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan