Paristamil Navigation Paristamil advert login

பா.ஜ.,வில் சேர்ந்த ஆம்ஆத்மி எம்பி 60க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்களை அணி திரட்டுகிறார்

பா.ஜ.,வில் சேர்ந்த ஆம்ஆத்மி எம்பி 60க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்களை அணி திரட்டுகிறார்

26 சித்திரை 2026 ஞாயிறு 13:28 | பார்வைகள் : 310


ராகவ் சத்தா தலைமையில் ஆம் ஆத்மி எம்.பி.,க்கள் ஏழு பேர் அக்கட்சியில் இருந்து விலகி, நேற்று முன்தினம் பா.ஜ.,வில் சேர்ந்த நிலையில், அடுத்த திருப்பமாக, பஞ்சாப் ஆம் ஆத்மி அரசில், 60க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்களை அணி திரட்டும் வேலையில் அவர் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆம் ஆத்மியின் தேசிய முகமாக அறியப்பட்டவர், அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த ராகவ் சத்தா. இவருக்கும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே சமீப காலமாக உரசல் இருந்தது.

சட்டசபை தேர்தல் இந்நிலையில், விமான நிலையத்தில் மலிவு விலை உணவு கடைகள் இருப்பதற்காக, பா.ஜ., அரசை சமீபத்தில் ராகவ் சத்தா பாராட்டினார்.

இதையடுத்து, ராஜ்ய சபாவில் ஆம் ஆத்மி துணை தலைவராக இருந்த அவரது பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு பதில், ஆம் ஆத்மியின் மற்றொரு  எம்.பி.,யான அசோக் மிட்டல், கட்சியின் துணை தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதனால் கடும் அதிருப்தியடைந்த ராகவ், தன் சமூக வலைதள பக்கங்களில் அரவிந்த் கெஜ்ரிவாலையும், கட்சியையும் மறைமுகமாக விமர்சித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம், ஆம் ஆத்மியின் ஆறு எம்.பி.,க்களுடன், பா.ஜ.,வில் அவர் ஐக்கியமானார்.

ஆம் ஆத்மியின் ராஜ்ய சபா எம்.பி.,க்களின் மொத்த பலம் 10. அதில், ராகவ் சத்தாவுடன் சேர்த்து ஏழு எம்.பி.,க்கள் கட்சி மாறியதால், அது மூன்றில் இரண்டு பங்கு ஆகிறது. எனவே, அவர்கள் கட்சி தாவல் தடை சட்டத்தில் இருந்தும் தப்பிப்பர் என கூறப்படுகிறது.

இந்த விரிசல், பஞ்சாப் ஆம் ஆத்மி அரசிலும் எதிரொலிக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்து உள்ளது.

பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில், 2022 முதல் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சட்டசபை இடங்களின் மொத்த எண்ணிக்கை 117. பெரும்பான்மைக்கு 59 இடங்கள் தேவை. ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.,க்களின் பலம் 92 ஆக உள்ளது.

இங்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. திறமையான மற்றும் சரியான மனிதர்களுக்குக்கு உரிய மதிப்பு வழங்கப்படுவதில்லை என்ற புகைச்சல், பஞ்சாப் ஆம் ஆத்மியிலும் உள்ளது.

அதிருப்தி டில்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பான விசாரணைகள் மற்றும் அமலாக்கத்துறை சோதனைகள், பஞ்சாப் எம்.எல்.ஏ.,க்களிடையே அச்சத்தையும், டில்லி மத்திய தலைமை மீது அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளன.

ற்போது வரை 92 எம்.எல்.ஏ.,க்களும் பகவந்த் மான் அரசுக்கு ஆதரவாக இருந்தாலும், ராகவ் சத்தா தலைமையில் ஏழு எம்.பி.,க்கள் வெளியேற்றமும், அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளும் இந்த அதிருப்தியை மிகப்பெரிய கிளர்ச்சியாக மாற்றும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இதற்கிடையே, ராகவ் சத்தா, பா.ஜ., தலைமையிடம் 'பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் 48 பேரின் உறுதியான ஆதரவு தனக்கு உள்ளது. இதை, 63 ஆக உயர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளேன்' என கூறியதாக, டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது:

ராகவ் சத்தா பஞ்சாப் அரசியலை குறிவைத்து காய் நகர்த்த துவங்கி உள்ளார். பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக மக்களும் அதிருப்தியில் உள்ளனர். எம்.எல்.ஏ.,க்களும் தங்கள் அரசியல் எதிர்காலம் குறித்து கலக்கத்தில் உள்ளனர்.

எனவே, அவர்கள் ராகவ் சத்தா மூலம் பா.ஜ.,வில் இணையும் முடிவில் உள்ளனர். 92 எம்.எல்.ஏ.,க்களில் சிலர் மட்டும் பிரிந்து சென்றால், பதவி இழப்புக்கு ஆளாக நேரிடும் என்பதால், மூன்றில் இரண்டு பங்கு எண்ணிக்கையான, 63 எம்.எல்.ஏ.,க்களை அணி திரட்டும் முயற்சியில் சத்தா உள்ளார் .

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தலைமை சரியில்லை! ஆம் ஆத்மி கட்சி தலைமை சரியான பாதையில் சென்றிருந்தால், ராகவ் சத்தா உட்பட ஏழு எம்.பி.,க்கள் கட்சியை விட்டு வெளியேறி இருக்க மாட்டார்கள்.  ராகவ் சத்தா உள்ளிட்டோர் ஏதோ ஒரு சிக்கலை எதிர்கொண்டதால் தான் வெளியேறியுள்ளனர். --அன்னா ஹசாரே, சமூக ஆர்வலர்