மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு வழி ஏற்படுத்தும் மம்தா; ராகுல்
26 சித்திரை 2026 ஞாயிறு 05:14 | பார்வைகள் : 269
மேற்கு வங்கத்தில் பாஜ நுழைவதற்கான வழியை மம்தா பானர்ஜி தான் திறந்து விடுகிறார். அவர் மக்களின் நலனுக்காகச் செயல்பட்டிருந்தால், பாஜவால் இங்கு ஊடுருவியிருக்க முடியாது,' என்று காங்கிரஸ் எம்பி ராகுல் தெரிவித்துள்ளார்.
2வது கட்ட தேர்தலையொட்டி ஹூக்ளி மாவட்டம் ஸ்ரீராம்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது; அமலாக்கத்துறை என்னை ஐந்து நாட்கள் தொடர்ந்து 55 மணிநேரம் விசாரணை செய்தது. ஆனால் மம்தா பானர்ஜி எத்தனை மணிநேரம் விசாரணை செய்யப்பட்டார்? மேற்கு வங்க முதல்வர் மீது அமலாக்கத்துறையோ அல்லது சிபிஐயோ எந்த விசாரணையும் நடத்தவில்லை. இது அவர் பாஜவை நேரடியாக எதிர்க்காததால்தான் நடக்கிறது.
தற்போது நான் ஜாமினில் வெளியில் இருக்கிறேன். எனது வீடு பறிக்கப்பட்டது, எனது எம்.பி., பதவி பறிக்கப்பட்டது. என் மீது 36 வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளுக்காக 10-15 நாட்களுக்கு ஒருமுறை ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், குஜராத் மற்றும் பீகார் என பல்வேறு மாநிலங்களுக்கு நான் பயணிக்க வேண்டியுள்ளது. மம்தா பானர்ஜி மீது பிரதமர் மோடி எத்தனை வழக்குகளைப் பதிவு செய்துள்ளார் என்று நான் கேட்க விரும்புகிறேன்.
காங்கிரஸ் கட்சி மட்டுமே பாஜவை கொள்கை ரீதியாக எதிர்க்கிறது. பிரதமர் மோடி என்னையும், காங்கிரஸ் தலைவர் கார்கேவையும் மற்றவர்களையும் 24 மணி நேரமும் தாக்கிப் பேசுகிறார். ஆனால், மம்தா பானர்ஜியை தேர்தல் நேரத்தில் மட்டுமே அவர் தாக்குகிறார். மேற்கு வங்கத் தேர்தல் முடியட்டும்.
அதன்பிறகு, மம்தா பானர்ஜிக்கு எதிராக பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேச மாட்டார். பாஜ, ஆர்எஸ்எஸ் மற்றும் அவர்களின் கொள்கைகளை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே தோற்கடிக்க முடியும் என்பது அவருக்குத் தெரியும்.
மேற்கு வங்கத்தில் ஒருவருக்கு வேலை கிடைக்க வேண்டும் என்றால், அவர் திரிணமுல் காங்கிரஸில் உறவினராக இருக்க வேண்டும். இல்லையெனில் அவருக்கு வேலை கிடைக்காது. மம்தா பானர்ஜி தனது கட்சியின் குண்டர்கள் மற்றும் தொண்டர்களின் நலனுக்காக மட்டுமே செயல்படுகிறார்.
பிரதமர் மோடி ஊழலில் ஈடுபடுகிறார் என்றால், மம்தா பானர்ஜியும் அதற்கு சளைத்தவர் அல்ல. மம்தா பானர்ஜி தான் மேற்கு வங்கத்தில் பாஜ நுழைவதற்கான வழியைத் திறந்து விடுகிறார். அவர் மக்களின் நலனுக்காகச் செயல்பட்டிருந்தால், பாஜவால் இந்த மாநிலத்தில் ஊடுருவி இருக்க முடியாது, இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan