IPL-லில் அதிவேக 2000 ஓட்டங்கள் பெற்று சாதனை படைத்த தமிழக வீரர் சாய் சுதர்சன்
25 சித்திரை 2026 சனி 18:23 | பார்வைகள் : 283
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தமிழக வீரர் சாய் சுதர்சன் குறைந்த போட்டிகளில் 2000 ஓட்டங்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 24.04.2026 லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற RCB அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதல் பேட்டிங்கில் களமிறங்கிய குஜராத் அணியில் சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர்.
இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய சாய் சுதர்சன் 58 பந்துகளில் 100 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
அத்துடன் ஐபிஎல் தொடரில் அதிக வேகமாக 2000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையையும் சாய் சுதர்சன் படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக கிறிஸ் கெயில் 48 போட்டிகளில் 2000 ஓட்டங்களை கடந்து இருந்தார், தற்போது சாய் சுதர்சன் 47 ஓட்டங்கள் விளையாடி 2000 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயித்த 206 ஓட்டங்கள் என்ற இலக்கை பெங்களூரு அணி 18.5 ஓவர்கள் முடிவிலேயே எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan