ஈரானிய வெளியுறவு அமைச்சர் - பாகிஸ்தான் இராணுவத் தளபதி சந்திப்பு
25 சித்திரை 2026 சனி 17:45 | பார்வைகள் : 199
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்டு மார்ஷல் அசிம் முனீரைச் சந்தித்து மிக முக்கியமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி உடன்படிக்கையை இறுதி செய்வதில் பாகிஸ்தான் மத்தியஸ்தராகச் செயல்பட்டு வரும் நிலையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
கடந்த பெப்ரவரி 28 முதல் மார்ச் வரை நீடித்த அமெரிக்க - ஈரான் போர், தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. 23-ம் திகதியுடன் முந்தைய போர் நிறுத்தம் நிறைவடைந்த நிலையில், அதனை காலவரையறையின்றி நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.
இருப்பினும், ஹோர்முஸ் நீரிணை ஈரானிய இராணுவத்தால் மூடப்பட்டுள்ளதாலும், அமெரிக்க போர்க்கப்பல்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளதாலும் பதற்றம் குறையவில்லை. இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த ஜனாதிபதி ட்ரம்ப், “காலம் கடந்து கொண்டிருக்கிறது, ஈரான் விரைந்து முடிவெடுக்க வேண்டும்” என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
பாகிஸ்தான் வந்தடைந்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, தனது முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பாக பாகிஸ்தான் இராணுவத் தளபதியை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தர்-ஐ அவர் சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பில் ஈரானிய தரப்பில் துணை வெளியுறவு அமைச்சர் காசிம் கிரபாபாடி, தூதர் ரெசா அமிரி மொகாதம் ஆகியோர் கலந்துகொண்டனர். பாகிஸ்தான் தரப்பில் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். அமெரிக்காவின் அமைதி நிபந்தனைகள் தொடர்பான ஈரானின் உத்தியோகபூர்வ பதிலை அராக்சி இந்தச் சந்திப்பில் பகிர்ந்துகொண்டதாகத் தெரிகிறது.
ஈரானுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை முன்னெடுக்க அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப் மற்றும் அதிபரின் ஆலோசகர் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் பாகிஸ்தான் விரைந்துள்ளனர்.
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் இது குறித்துக் கூறுகையில், “ஜனாதிபதி ட்ரம்ப் எப்போதும் ராஜதந்திரத்திற்கே முதல் வாய்ப்பை வழங்க விரும்புகிறார். இப்போதும் அதையே அவர் செய்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி வெளியிட்ட 'எக்ஸ்' பதிவில், "ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நேரடி சந்திப்பு எதுவும் திட்டமிடப்படவில்லை. ஈரானின் நிலைப்பாடுகள் மற்றும் கருத்துக்கள் பாகிஸ்தான் ஊடாகவே தெரிவிக்கப்படும்" எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள இந்தப் பேச்சுவார்த்தைகள், மேற்காசிய அமைதி திரும்புமா என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய கட்டமாகப் பார்க்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan