அடுத்த மாதம் மின் பற்றாக்குறை அதிகரிக்கும்!
25 சித்திரை 2026 சனி 07:46 | பார்வைகள் : 134
மின் தேவை அதிகம் உள்ள தென் மாநிலங்களில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அதனால், அடுத்த மாதம் முதல் மின் பற்றாக்குறை அதிகரிக்கும் என, மத்திய அரசு எச்சரித்து உள்ளது.
தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்களில், 2025 மார்ச் மாதத்துடன், கடந்த மார்ச் மாத நிலவரத்தை ஒப்பிட்டு, மின் தேவை விபரங்களை, மத்திய மின் துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, தென் மாநிலங்களின் தினசரி மின் தேவை, 69,934 மெகாவாட்டில் இருந்து, 73,805 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில், 19,679 மெகாவாட்டில் இருந்து, 19,822 மெகாவாட்டாக, மின் தேவை உயர்ந்து, முதலிடத்தில் உள்ளது.
ஆந்திர மாநில மின் தேவை, 13,107ல் இருந்து, 14,011 மெகாவாட்டாகவும்; தெலுங்கானாவில், 17,162ல் இருந்து, 18,548 ஆகவும், கர்நாடகாவில், 18,395ல் இருந்து, 18,655 ஆகவும்; கேரளாவில், 5,334ல் இருந்து, 5,844 மெகாவாட்டாகவும் அதிகரித்து உள்ளது. இருப்பினும் புதுச்சேரியில், 483 மெகாவாட்டில் இருந்து, 476 மெகாவாட்டாக குறைந்து உள்ளது. தமிழகத்தில் அடுத்த மாதம் முதல், மாலையில் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக, மின் வாரியத்தை, மத்திய மின் துறை எச்சரித்துள்ளது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மின் தேவை எவ்வளவு இருக்கும், எவ்வளவு மின்சாரம் கிடைக்கும், பற்றாக்குறை எவ்வளவு ஏற்படும் என்பதை முன்கூட்டியே மதிப்பீடு செய்து, பற்றாக் குறையை சமாளிக்க, மின் கொள்முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan