அடுத்த குறி டில்லி!: மம்தா பானர்ஜி
25 சித்திரை 2026 சனி 06:30 | பார்வைகள் : 1478
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வெற்றியை உறுதி செய்தபின் டில்லியை கைப்பற்றுவேன்' என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட தேர்தலையொட்டி திரிணமுல் காங்., சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நேற்று கொல்கட்டாவின் சவுரங்கி பகுதியில் நடந்தது. இதில் பங்கேற்று முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:
பா.ஜ.,வால், எங்களை வீழ்த்த முடியாது. நாங்கள் அநீதிக்கு எதிராக போராடுகிறோம். எங்கள் உரிமைகளுக்காக போராடுகிறோம். மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வெற்றியை உறுதி செய்தபின் டில்லியை கைப்பற்றுவேன். அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைப்பதன் மூலம் நான் இதை சாதிப்பேன்.
எனக்கு அதிகாரமோ பதவியோ தேவையில்லை. டில்லியில், பா.ஜ.,வை முற்றிலும் அகற்றுவதையே நான் விரும்புகிறேன். மேற்கு வங்கத்தில் அவர்களின் வீழ்ச்சி தவிர்க்க முடியாதது. டில்லியில் இருந்தும் பா.ஜ., வெளியேற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பா.ஜ., சார்பில் பிரசாரம் மேற்கொள்ள வந்த மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம், மம்தா கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் சிரித்தபடி, “மேற்கு வங்கத்திலேயே அவருக்கு மிச்சம் ஏதுமில்லை. அதன்பின் அவர் எப்படி டில்லிக்கு வர முடியும்?,” என்றார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan