ஜனநாயகன்' ரிலீஸ் அறிவிப்பு வருமா ?
24 சித்திரை 2026 வெள்ளி 15:42 | பார்வைகள் : 249
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். அவர் நடித்த கடைசி படமான 'ஜனநாயகன்' படம் இதன் காரணமாகத்தான் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாமல் தாமதம் செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், அது குறித்து எந்த விதத்திலும் வெளிப்படையாக விமர்சனம் செய்யாமல் தவிர்த்தார் விஜய். நேற்று தமிழக சட்டசபை தேர்தலும் நடந்து முடிந்துவிட்டது.
அதனால், விரைவிலேயே 'ஜனநாயகன்' படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பு வருமா என விஜய் ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் எதிர்பார்த்துள்ளனர். இருந்தாலும் சமீபத்தில் இப்படம் இணையதளங்களில் முழுமையாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் காரணமாகவும் படத்தின் தாமதம் காரணமாகவும் படத்தின் வியாபாரம் தற்போது மறு பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளது.
இது குறித்து விரைவில் முடிவெடுக்கப்பட்டு அதன்பின்பே படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பு வரும் என்கிறார்கள். மே 4 தேர்தல் முடிவுகள் வந்த பின்பு படம் வெளியானால் அது பரபரப்பை ஏற்படுத்தாது. மீண்டும் திமுக ஆட்சியே வந்தால் சொல்லவே வேண்டாம். விஜய் மீதுள்ள திமுகவின் கோபத்திற்கு தாங்களும் ஆளாக வேண்டாம் என தியேட்டர்காரர்கள் படத்தை வெளியிடுவதைத் தவிர்க்க வாய்ப்புண்டு. அதற்கு முன்னதாக படத்தை வெளியிடவும் வாய்ப்பில்லை. பத்து நாட்களுக்கும் குறைவான இடைவெளியில் அது சாத்தியமில்லை.
'ஜனநாயகன்' படத்தின் வியாபாரம் முன்பை விட பாதி அளவிற்காவது குறைத்து பேசப்படும் என்றுதான் கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். அப்படி நடந்தால் அது தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தலாம். எனவே, அதை சரிக்கட்ட மீண்டும் அந்நிறுவனத்திற்கு விஜய் படம் ஒன்றை நடித்துக் கொடுப்பார் என்றும் சொல்கிறார்கள். ஆக, இப்போதைக்கு 'ஜனநாயகன்' வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளிவர வாய்ப்பில்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே வரும் என்றும் ஒரு தகவல் உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan