இலங்கையில் மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளில் புதிய நடைமுறை
24 சித்திரை 2026 வெள்ளி 13:57 | பார்வைகள் : 165
மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளில் தனிப்பயனாக்கப்பட்ட பெயர்களை உள்ளடக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக அத்திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அரசு நிதி பற்றிய பாராளுமன்றக் குழுவின் முன்னிலையில் அண்மையில் கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், தற்போது நடைமுறையிலுள்ள பழைமையான கணினி அமைப்பில் தொழில்நுட்பக் குறைபாடுகள் காணப்படுவதால் இத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் உள்ளதாக குறிப்பிட்டனர். ஆயினும் தற்போதைய கணினி அமைப்பை நவீனமயப்படுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளதால் 6 மாத காலத்துக்குள் இத்திட்டத்தை ஆரம்பிக்க முடியுமெனவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறான இலக்கத் தகடுகளுக்கு முன்பதிவு செய்வதற்காக 100,000 ரூபா முதல் ஒரு மில்லியன் ரூபாவரை கட்டணம் அறவிடப்படுகிறது. ஏற்கெனவே சிலர் ஒரு மில்லியன் ரூபா செலுத்தி இவ்வாறான இலக்கத் தகடுகளை பெற்றுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
விசேட இலக்கத் தகடுகளை பெற்றுக்கொண்ட வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தரவுகளை முன்வைத்தனர். அதன்படி 2023ஆம் ஆன்டில் 11 வாகனங்களும், 2024ஆம் ஆண்டில் 46 வாகனங்களும், 2025ஆம் ஆண்டில் 692 வாகனங்களும் விசேட இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொண்டுள்ளன.
இதேவேளை 2026 ஏப்ரல் 17 ஆம் திகதி வரை 436 நபர்கள் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இலக்கத் தகடுகளை முன்பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
2023 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 1,185 வாகனங்கள் இவ்வாறான விசேட இலக்கத் தகடுகளைப் பெற்றுள்ளமை அல்லது முன்பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் ஏற்கனவே நடைமுறையிலுள்ள இந்த முறையை இலங்கையிலும் அறிமுகப்படுத்துவதன் மூலம் வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனப் பதிவு எண்களைத் தனிப்பயனாக்கிக் கொள்ளும் விருப்பத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan