உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி - $2 மில்லியனை தாண்டிய டிக்கெட் விலைகள்
24 சித்திரை 2026 வெள்ளி 10:43 | பார்வைகள் : 128
உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் விலை விண்ணை தொட்டுள்ளது.
பிஃபா உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விற்பனைகள் தொடங்கியுள்ள நிலையில், கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கும் விதமாக டிக்கெட் விலைகள் புதிய உச்சம் தொட்டுள்ளன.
ஜூலை 19ம் திகதி நியூ ஜெர்சியின் மெட்லைஃப் மைதானத்தின் நடைபெறும் இறுதிப் போட்டிக்கான குறிப்பிட்ட நான்கு இருக்கை டிக்கெட் விலை ஒவ்வொன்றும் சுமார் $2.2 மில்லியன் (சுமார் ₹18 கோடி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நான்கு இருக்கைகளையும் ஒருவர் வாங்க நினைத்தால் அவர் மொத்தமாக $9.2 மில்லியன் தொகை செலவு செய்ய வேண்டும்.
பிஃபா (FIFA) அமைப்பின் அதிகாரப்பூர்வ மறுவிற்பனை தளத்தில் இந்த டிக்கெட்டுகளானது விற்பனைக்கு வந்துள்ளது.
அதே சமயம் கோல் கம்பிகளுக்கு பின்புறம் உள்ள உள்ள சில இருக்கைகளுக்கான டிக்கெட்கள் $16,098 (சுமார் ₹13.5 லட்சம்) என குறைந்த விலையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முன்பு டிக்கெட் மறு விற்பனை தளத்திற்கான கட்டுப்பாடுகள் இருந்தது, அவை தற்போது தராளமயமாக்கப்பட்ட சந்தை விதிகளால் டிக்கெட் விலைகள் பல மடங்கு அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
டிக்கெட் விலைகள் குறித்து சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருந்தாலும், இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan