பார்முலா 1 கார் பந்தயத்தில் 19 வயதில் முதலிடம் பிடித்த இத்தாலி வீரர்
17 பங்குனி 2026 செவ்வாய் 17:53 | பார்வைகள் : 1064
சீன பார்முலா 1 கார் பந்தயத்தில் இத்தாலியின் கிமி அன்டோனெல்லி முதலிடம் பிடித்தார்.
சீனாவின் ஷாங்காய் நகரில் பார்முலா 1 கார் பந்தயம் நடந்தது. சீன கிராண்ட்பிரீ இரண்டாவது சுற்று 17.03.2026 நடந்தது.
இதில், இத்தாலியைச் சேர்ந்த கிமி அன்டோனெல்லி (Kimi Antonelli) பந்தய தூரத்தை ஒரு மணிநேரம் 33 நிமிடங்களில் எட்டினார்.
இதன்மூலம் அவர் 21 வீரர்களை கடந்து முதலிடம் பிடித்தார். மேலும், பார்முலா 1 கார்பந்தயத்தில் குறைந்த வயதில் வெற்றி கண்ட இரண்டாவது வீரர் என்ற சிறப்பையும் பெற்றார்.
19 வயதாகும் கிமி அன்டோனெல்லி இந்த வெற்றியின் மூலம் 25 புள்ளிகள் பெற்றார்.
அவரை விட 5.515 வினாடி மட்டுமே பின்தங்கிய இங்கிலாந்து வீரர் ஜார்ஜ் ரஸ்செல் (மெர்சிடஸ் அணி) இரண்டாவதாக வந்து 18 புள்ளிகள் பெற்றார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan