ஹன்சிகா விவாகரத்துக்கு காரணம் என்ன?
13 பங்குனி 2026 வெள்ளி 14:57 | பார்வைகள் : 199
நான்கு வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு, நடிகை ஹன்சிகா இரண்டு நாட்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றார். 2022-ல் சோஹேல் கத்தூரியாவை அவர் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், விவாகரத்துக்குப் பிறகு முதல்முறையாக ஹன்சிகா தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். 'சர்தி காலா' (Chardi Kala) என்ற பஞ்சாபி வாக்கியத்தை அவர் பதிவிட்டுள்ளார். இதற்கு, 'சங்கடமான நேரத்திலும் நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்வது' என்று அர்த்தம்.
கடந்த ஆண்டு முதலே ஹன்சிகா விவாகரத்து செய்யப் போவதாக வதந்திகள் பரவி வந்தன. ஆனால், இதுகுறித்து அவர் எந்த இடத்திலும் கருத்து தெரிவிக்கவில்லை. பரஸ்பர சம்மதத்தின் பேரில்தான் இருவரும் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். மும்பையில் உள்ள பாந்த்ரா குடும்பநல நீதிமன்றம் அவர்களுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. விவாகரத்தின்போது ஹன்சிகா ஜீவனாம்சம் எதுவும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்குப் பிறகு சில காலமே இருவரும் ஒன்றாக வாழ்ந்ததாகவும், அவர்களுக்குள் அடிப்படையான பல கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
சிறிய விஷயங்கள் கூட பெரிய வாக்குவாதங்களுக்கும் சண்டைகளுக்கும் வழிவகுத்ததால், ஒரே வீட்டில் வசிப்பது தம்பதியருக்கு கடினமாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2022-ல் தான் ஹன்சிகா - சோஹேல் திருமணம் நடைபெற்றது. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான ஹன்சிகா, பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். 2024-ல் வெளியான 'கார்டியன்' என்ற தமிழ்ப் படம்தான் ஹன்சிகா நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம்.
சோஹேலின் இரண்டாவது மனைவி தான் ஹன்சிகா மோத்வானி. அதற்கு முன்னதாக ஹன்சிகாவின் தோழியை சோஹேல் திருமணம் செய்துகொண்டார். அந்த திருமணத்தில் ஹன்சிகாவும் கலந்துகொண்டார். அத்திருமணம் விவாகரத்தில் முடிந்ததை அடுத்து, ஹன்சிகா உடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்துகொண்டார் சோஹேல். இவர்களது திருமணம் சுமார் 20 கோடி செல்வில் ராஜஸ்தானில் உள்ள பழமைவாய்ந்த அரண்மனையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan