நீண்ட தூர விமான கட்டணங்களை உயர்த்தும் Air France மற்றும் KLM!!
13 பங்குனி 2026 வெள்ளி 13:45 | பார்வைகள் : 3514
மத்திய கிழக்கில் நடைபெறும் போரின் காரணமாக எண்ணெய் மற்றும் விமான எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. இதன் விளைவாக Air France மற்றும் KLM Royal Dutch Airlines நிறுவனங்கள் தங்கள் நீண்ட தூர விமானப் பயணங்களுக்கான கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளன.
மார்ச் 11 முதல் வெளியிடப்படும் டிக்கெட்டுகளுக்கு, பொருளாதார வகுப்பில் இருவழிப் பயணத்திற்கு 50 யூரோக்கள் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். உலகம் முழுவதும் பல விமான நிறுவனங்களும் இதே காரணத்தால் கட்டணங்களை உயர்த்துகின்றன.
SAS Scandinavian Airlines, Cathay Pacific, Air India, Qantas போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே எரிபொருள் கூடுதல் கட்டணங்களை அறிவித்துள்ளன. பிரான்சில் உள்ள Air Caraïbes, French Bee, மற்றும் Corsair International நிறுவனங்களும் சந்தை நிலைக்கு ஏற்ப கட்டணங்களை மாற்றியமைத்துள்ளன.
விமான எரிபொருள் விலை உலகளவில் ஒரு பெறலுக்கு சுமார் 168 டொலர் வரை உயர்ந்துள்ளது. இதனால் விமான நிறுவனங்களின் செலவில் எரிபொருள் முக்கியமான பங்காக உள்ளது என்று International Air Transport Association (IATA) தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வின் தாக்கத்தை குறைக்க சில நிறுவனங்கள் முன்கூட்டியே நிரந்தர விலையில் எரிபொருள் வாங்கும் “ஹெட்ஜிங்” (hedging) என்ற தந்திரத்தையும் பயன்படுத்துகின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan