எரிபொருள் விலை உயர்வுக்கு கட்டுப்பாடு – லிட்டருக்கு 10 முதல் 30 சென்ட் வரை குறைக்க ஒப்புதல்!!
12 பங்குனி 2026 வியாழன் 16:33 | பார்வைகள் : 3812
உலகளாவிய எண்ணெய் நெருக்கடி மற்றும் எரிபொருள் விலை உயர்வின் தாக்கத்தை குறைக்கும் நோக்கில், அரசாங்கம் மற்றும் எரிபொருள் விநியோகஸ்தர்கள் இடையே முக்கிய ஆலோசனை நடைபெற்றது. பரிசிலுள்ள Bercyயில் இன்று வியாழக்கிழமை 12 ம் திகதி நடைபெற்ற இந்தக் கூட்டத்தின் பின்னர், சில நிறுவனங்கள் எரிபொருள் விலையை ஒரு வரம்புக்குள் நிர்ணயிக்கவும் மேலும் லிட்டருக்கு 10 முதல் 30 சென்ட் வரை விலையை குறைக்கவும் ஒப்புக்கொண்டதாக அரசு அறிவித்துள்ளது.
உலகளாவிய எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள பதற்றத்திற்கு முக்கிய காரணமாக ஹோர்முஸ் நீரிணையை பயன்படுத்த ஈரான் தடை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக உலகளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டதுடன், எரிபொருள் விலையும் அதிகரித்துள்ளது.
இந்த நிலைமையை சமாளிக்க G7 நாடுகள் அவசர ஆலோசனைகளை நடத்தி, International Energy Agency உடன் இணைந்து 400 மில்லியன் பேரல்கள் வரை மூலோபாய எண்ணெய் கையிருப்புகளை பயன்படுத்த முடிவு செய்துள்ளன. இருப்பினும், வியாழக்கிழமை எண்ணெய் பேரல் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலர் எல்லையை கடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், எரிபொருள் நிலையங்களில் விலை மோசடிகளை தடுக்கும் நோக்கில் DGCCRF அதிகாரிகள் 500க்கும் மேற்பட்ட கண்காணிப்புகளை மேற்கொண்டுள்ளனர். இடைக்கால அறிக்கையின்படி சுமார் 6 சதவீத எரிபொருள் நிலையங்கள் விதிமுறைகளை மீறியதாக கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan