ஜேசன் சஞ்சய் தந்தையின் பெயரை நீக்கினாரா ?
12 பங்குனி 2026 வியாழன் 15:10 | பார்வைகள் : 1950
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தற்போது இயக்குநராகத் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார். அவர் இயக்கும் 'சிக்மா' (Sigma) படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தற்போது சஞ்சய் எடுத்துள்ள ஒரு அதிரடி முடிவு சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.
அரசன்: சிம்பு - வெற்றிமாறன் கூட்டணியில் இணைந்த இரு துருவங்கள்! விக்ராந்த் மற்றும் கமலேஷ் ஜெகனின் மாஸ் என்ட்ரி!
பொதுவாக நட்சத்திர வாரிசுகள் தங்களது தந்தையின் அடையாளத்தைப் பயன்படுத்தியே திரையுலகிற்கு வருவார்கள். ஆனால், ஜேசன் சஞ்சய் தனது 'சிக்மா' படத்தில் தந்தை விஜய்யின் பெயரை (Vijay) பயன்படுத்தாமல், வெறும் 'ஜேசன் சஞ்சய்' என்று மட்டும் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சமீபத்திய தகவல்களின்படி, அவர் தனது கையெழுத்து மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் "Jason Sanjay S" என்றே குறிப்பிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதில் 'S' என்பது அவரது தாயார் சங்கீதா சொர்ணலிங்கம் (Sangeetha Sornalingam) பெயரைக் குறிப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது விஜய் மற்றும் சங்கீதா இடையிலான விவாகரத்து பிரச்சனையை காரணமாக வைத்து வெளியான தகவலாக கூட இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
விஜய்க்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக கூறி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், இதற்கு த்ரிஷா தான் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. நேரடியாக இதுவரையில் சங்கீதா விஜய் த்ரிஷாவின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் கூட அவர் ஒரு நடிகை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஒரே காஸ்டியூமில் ஒன்றாக திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது வெளியான வீடியோ சினிமா வட்டாரத்தில் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, ஈரோட்டில் உள்ள ஒரு ஃபேக்டரிக்கு விசிட் அடித்த ஜேசன் சஞ்சய், அங்குள்ள சாதாரண தொழிலாளர்களுடன் தரையில் அமர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
விஜய் தனது மனைவியை (சங்கீதா) ஒரு பொது மேடையில் மறைமுகமாக 'வொர்த் இல்லை' என்று விமர்சித்தார். அதை உடைக்கும் விதமாக மகன் சஞ்சய் எளிய மனிதர்களுடன் பழகும் குணத்தைப் பார்த்து, "தந்தை அப்படி சொன்னாலும், மகன் வொர்த் என்பதை நிரூபித்துவிட்டார்" என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஜேசன் சஞ்சய் இயக்கும் சிக்மா படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானரில் சிக்மா படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் சிக்மா படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பிரபலமானது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan