சட்டசிக்கலில் ஹர்திக் பாண்டியா - தேசியக் கொடியை அவமதிக்கப்பட்டதா...?
12 பங்குனி 2026 வியாழன் 14:30 | பார்வைகள் : 1452
இந்திய தேசியக் கொடியை அவமதித்ததாக ஹர்திக் பாண்டியா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
T20 உலகக் கிண்ணம் 2026 வெற்றிக்குப் பின் நடந்த கொண்டாட்டத்தில், இந்திய அணையின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தேசியக் கொடியை அவமதித்ததாக ஒருவர் புகார் அளித்துள்ளார்.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், இந்திய அணி மூன்றாவது முறையாக T20 உலகக் கிண்ணத்தை வென்றது.
அதனைத் தொடர்ந்து நடந்த கொண்டாட்டத்தில், பாண்டியா தேசியக் கொடியை போர்த்திக்கொண்டு நடனமாடியதும், தனது தோழி மஹீகா ஷர்மாவுடன் மேடையில் படுத்துக்க கொண்டிருந்ததும் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த காட்சிகள் தேசியக் கொடியை அவமதிப்பதாகக் கருதி, பூனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஜித் கான், சிவாஜிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
காவல்துறை அதிகாரிகள் புகார் பெறப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. சிலர் பாண்டியாவின் செயலை கண்டித்த நிலையில், மற்றவர்கள் கொண்டாட்டத்தின்போது நடந்த தவறான செயல் என கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்திய தேசியக் கொடியை தவறாக பயன்படுத்துவது Flag Code of India விதிகளுக்கு எதிரானது. அதனால், இந்த புகார் சட்டரீதியாக விசாரணைக்கு உட்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan