Paristamil Navigation Paristamil advert login

சிம்பு - வெற்றிமாறன் கூட்டணியில் இணைந்த இரு துருவங்கள்!

சிம்பு - வெற்றிமாறன் கூட்டணியில் இணைந்த இரு துருவங்கள்!

11 பங்குனி 2026 புதன் 15:50 | பார்வைகள் : 183


சிம்பு மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் படம் தான் அரசன். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் இப்போது விக்ராந்த் மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி பட புகழ் கமலேஷ் ஜெகன் ஆகியோர் இணைந்துள்ளனர். விடுதலை மற்றும் விடுதலை 2 போன்ற பிரமாண்ட படங்களுக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் தான் அரசன். இந்தப் படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

சிம்புவின் 49ஆவது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் சிம்புவுடன் இணைந்து சமுத்திரக்கனி, கிஷோர் குமார் ஜி, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சிம்பு, வெற்றிமாறன் மற்றும் அனிருத் கூட்டணியில் உருவாகும் முதல் படம் என்பதால் இந்தப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அரசன் வடசென்னை பாணியில் ஒரு பகுதியாக இருந்ததாக வெற்றி மாறன் தெரிவித்ததிலிருந்து, சிலம்பரசன் நடிக்கும் படத்திற்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. அப்போ வட சென்னை பிரபஞ்சத்திலிருந்து, ஆண்ட்ரியா ஜெராமியா மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் சந்திரா மற்றும் குணா வேடங்களில் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வட சென்னையில் இருந்து உருவாக்கப்பட்ட இந்த கதையை இதை "உலகிலிருந்து சொல்லப்படாத கதை" என்று விவரிக்கிறார்கள். அரசன் படத்தில் சிம்பு இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதுவும், யூத்தாகவும், வயதான தோற்றத்திலும் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

படத்தின் முதல் படப்பிடிப்பு கோவில்பட்டி மற்றும் மற்றும் மதுரையைச் சுற்றி படமாக்கப்பட்டதாம். அதன்பிறகு இரண்டாவது படப்பிடிப்பு சென்னையில் எடுக்கப் போவதாக சொல்லப்படுகிறது. கோவில்பட்டி மற்றும் மதுரையை சுற்றி சிலம்பரசன ஒரு கிராமத்து கதையை கொண்டு வருவதாகவும், இதில் சிம்பு இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாக சொல்லப்பட்ட வந்த நிலையில் பிளாஷ்பேக்கில் தனது அப்பா ஒரு கிராமத்தில் வாழ்ந்தார் என்பதை கோவில்பட்டி மற்றும் மதுரையை சுற்றி எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இரண்டாவது படப்பிடிப்பு சென்னையில் படமாக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அதாவது ஒரு சிட்டியை பின்னணியில் வைத்து வருவதாகவும் தெளிவுபடுத்துகிறது.

படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கவிருக்கும் நிலையில், நடிகர் விக்ராந்த் மற்றும் Tourist Family புகழ் குழந்தை நட்சத்திரம் கமலேஷ் ஜெகன் ஆகியோர் படத்தின் நடிகர்களுடன் இணைந்துள்ளதாக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

விக்ராந்தின் முக்கியத்துவம்: 'அரசன்' படத்தில் விக்ராந்த் ஒரு பவர்ஃபுல்லான நெகட்டிவ் ரோல் அல்லது முக்கியத் துணை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

கமலேஷ் ஜெகனின் வருகை: தனது யதார்த்தமான நடிப்பால் கவனம் ஈர்த்த கமலேஷ் ஜெகன், வெற்றிமாறனின் உலகத்திற்குள் (Vetri Maaran Universe) நுழைவது படத்தின் நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது.

கதைக்களம்: 'அரசன்' திரைப்படம் முழுக்க முழுக்க வடசென்னை அல்லது நிலம் சார்ந்த அரசியலைப் பேசும் ஒரு ஆக்ஷன் டிராமா படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

11 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026