RER ரயில்களின் தாமதம் தொடர்பான இழப்பீட்டு விண்ணப்பங்கள் நாளை முதல் ஆரம்பம்!!
10 பங்குனி 2026 செவ்வாய் 08:01 | பார்வைகள் : 3189
பரிஸில் 2025ஆம் ஆண்டில் தாமதம் ஏற்பட்ட RER B, C மற்றும் D ரயில் கிளைகளை பயன்படுத்திய சில பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் மார்ச் 11 முதல் தொடங்கியுள்ளது. Navigo சந்தா வைத்திருக்கும் மற்றும் இந்த பாதைகளை தினமும் பயன்படுத்தும் பயணிகள், Île-de-France Mobilités (IDFM) இணையதளத்தில் ஏப்ரல் 7 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஒரு ரயில் கிளையின் நேர்த்தி விகிதம் ஒரு ஆண்டில் குறைந்தது மூன்று மாதங்கள் 80% க்குக் கீழ் இருந்தால், அந்த கிளையை பயன்படுத்திய பயணிகளுக்கு Navigo சந்தாவின் ஒரு பகுதி தொகை திருப்பி வழங்கப்படும்.
இந்த ஆண்டு முக்கியமாக
- RER B (Aulnay-sous-Bois / Mitry-Claye)
- RER B: Aulnay-sous-Bois / Aéroport CDG2
- RER C (Dourdan / La Norville)
- RER D: Vigneux / Corbeil
- RER D: Creil / Goussainville
- T12
கிளைகள் இந்த அளவுக்கு கீழ் சென்றதால் இழப்பீடு வழங்கப்படுகிறது.
தகுதி உள்ள பயணிகள் சுமார் அரை மாத Navigo கட்டணத்திற்குச் சமமான 44,40 யூரோ வரை பெறலாம். அதிகாரிகள் மோசடி மின்னஞ்சல்கள் குறித்து எச்சரித்து, விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ IDFM இணையதளத்தில் மட்டுமே செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan