Paristamil Navigation Paristamil advert login

பெண்களின் வாழ்க்கையில் பெண் தோழிகள் ஏன் மிகவும் முக்கியம்?

பெண்களின் வாழ்க்கையில் பெண் தோழிகள் ஏன் மிகவும் முக்கியம்?

10 பங்குனி 2026 செவ்வாய் 05:02 | பார்வைகள் : 166


சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ம் திகதி  கொண்டாடப்படுகிறது. மன அழுத்தத்தை குறைப்பது முதல் தன்னம்பிக்கையை அதிகரிப்பது வரை, ஒவ்வொரு பெண்களின் வாழ்க்கையிலும் பெண் தோழிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் திகதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாள் பெண்களின் சாதனைகளை கொண்டாடும் நாளாக மட்டுமல்ல; பெண்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக ஒற்றுமையாக இருப்பதை குறிக்கும் நாளாகவும் பார்க்கப்படுகிறது

பல பெண்கள் தங்கள் வாழ்க்கையில் முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது முதலில் பகிர்ந்து கொள்வது குடும்பத்தினருடன் அல்ல, நெருங்கிய பெண் தோழிகளுடன் தான். வாழ்க்கையின் பல்வேறு சூழல்களில் இந்த நட்பு உறவு பெண்களுக்கு மன உறுதி மற்றும் நம்பிக்கையை அளிக்கிறது.

பெண் நட்புறவை வலுப்படுத்தும் அம்சங்கள்

   சிரமமான நேரங்களில் உணர்ச்சி ரீதியான ஆதரவு அளித்தல்
   ஒரே மாதிரியான அனுபவங்களை புரிந்துகொள்ளும் புரிதல்
   தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை ஊக்குவித்தல்
   நம்பிக்கை மற்றும் வெளிப்படையான உரையாடல் மேற்கொள்ளுதல்

இந்த அம்சங்கள் பெண்களின் நட்புறவை அழகாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாற்றுகின்றன

ஆராய்ச்சி என்ன கூறுகின்றன
உலகளவில் உறவுகள் மற்றும் மகிழ்ச்சி குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அதில் முக்கியமானதாக கருதப்படும் Harvard Study of Adult Development ஆய்வு, 80 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்களின் வாழ்க்கையை ஆய்வு செய்து வருகிறது.

இந்த ஆய்வில், வலுவான உறவுகள் மற்றும் சமூக தொடர்புகள், மனிதர்களின் நீண்டகால மகிழ்ச்சிக்கும் வாழ்க்கை திருப்தியை அதிகரிக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பது தெரியவந்துள்ளது.

பெண் நட்பு உறவின் சில நன்மைகள்

மன அழுத்தத்தை குறைக்கும்

நம்பிக்கையான நண்பர்களுடன் பேசுவது மனதில் இருக்கும் கவலைகளை குறைக்க உதவுகிறது. வேலை, குடும்பம் அல்லது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் அழுத்தங்களை சமாளிக்கும்போது நண்பரின் ஆதரவு மனதை லேசாக உணர வைக்கும்.

தன்னம்பிக்கையை அதிகரிக்கும்

பொறாமை குணமின்றி தோழியின் சாதனையை பாராட்டி அவர்கள் முன்னேற ஊக்குவிப்பார்கள். இச்செயல் மனதில் தன்னம்பிக்கையை அதிகரித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்கான உத்வேகத்தை அளிக்கும்.


   அனுபவங்கள் பகிர்ந்துகொள்ள உதவும்

வாழ்க்கையின் பல்வேறு அனுபவங்களை பகிரும் போது ஒருவருக்கொருவர் புரிதல் அதிகரிக்கிறது. நீங்கள் குழப்பத்தில் அல்லது முயற்சிக்க தயங்கும் சமயத்தில் சிறந்த வழிகாட்டியாக திகழ்வார்கள்

   தனிமை உணர்வை குறைக்கும்

பெண்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கும்போது சிறந்த நட்பு வட்டம் உருவாகக்கூடும். சிரமமான சூழல்களில் ஆலோசனை வழங்கி, தனிமை உணர்வை குறைப்பதோடு நம்பிக்கையை அளிப்பார்கள்

நட்பு உறவை வலுப்படுத்தும் வழிகள்

   பிறந்தநாளில் நேரில் சந்திக்க அல்லது தொலைபேசியில் உரையாட நேரம் ஒதுக்குங்கள்
   தோழியின் வெற்றியை இணைந்து கொண்டாடுங்கள்
   கஷ்டமான நேரங்களில் முடிந்த ஆதரவை அளித்து துணையாக இருங்கள்
   தோழி சொல்ல வரும் கருத்தை மதித்து கேட்கும் பழக்கத்தை வளர்த்துகொள்ளுங்கள்

இச்சிறிய முயற்சிகள் நட்பு உறவை மேலும் வலுப்படுத்த செய்கின்றன.

வாழ்க்கையில் பல உறவுகள் இருந்தாலும், உண்மையான நட்பு உறவு தனித்துவமானது. குறிப்பாக, பெண்களின் வாழ்க்கையில் பெண் தோழிகள் உணர்ச்சி ஆதரவு மற்றும் மகிழ்ச்சியை அளிக்கும் முக்கிய உறவாக திகழ்கின்றனர்.

இந்த மகளிர் தினத்தில் உங்க வாழ்க்கையில் அற்புதங்களை ஏற்படுத்திய பெண் தோழிகளை தொடர்பு கொண்டு நன்றியுணர்வை வெளிப்படுத்துங்கள். நட்பை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

 

 

10 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026