இலங்கையில் 12 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - குற்றவாளிக்கு பத்து வருட கடூழிய சிறை
9 பங்குனி 2026 திங்கள் 18:30 | பார்வைகள் : 1391
முல்லைத்தீவு நாயாறு பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு பன்னிரெண்டு வயதுச் சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நாயாறு பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி 12 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச் சாட்டுத் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாரால் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டு இச் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரையும் சான்றுப் பொருட்கள் என்பவற்றையும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
தொடர்ந்து குறித்த வழக்கானது ஆரம்பத்தில் வவுனியா மேல் நீதிமன்றத்திலும் பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த வழக்கின் விசாரணைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்று (09)குறித்த வழக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி A.G அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீட்டை செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் இரண்டு வருட சாதாரண சிறைத்தண்டனையும், அத்துடன் பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் மூன்று மாத கால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan