அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் கமல்ஹாசன்?
8 பங்குனி 2026 ஞாயிறு 14:38 | பார்வைகள் : 1307
இந்தியத் திரையுலகத்தில் யார் அதிக சம்பளம் பெறுகிறார்கள் என்பது குறித்து எந்தவிதமான ஆதாரப்பூர்வ தகவலும் இருக்காது. காற்று வாக்கில் வரும் செய்திகளை வைத்துத்தான் சம்பளம் பற்றி தகவல்கள் வெளிவரும்.
தற்போதைய ஏஐ தரவுகளின்படி அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் முதலிடத்திலும், தமிழ் நடிகர் ரஜினிகாந்த் இரண்டாவது இடத்திலும், ஹிந்தி நடிகர் ஷாரூக் கான் மூன்றாவது இடத்திலும் இருக்கிறார்கள். விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தில் அவரது சம்பளம் 200 கோடி என்றார்கள். அவரது மேனேஜர் அந்தப் படத்தின் இணை தயாரிப்பாளர் என்பதால் அதையெல்லாம் சரியான கணக்கில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
ஒரு படத்திற்காக ஒரு நடிகர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பதைப் பொறுத்துத்தான் ஒரு நடிகரின் சம்பளம் அதிகமா, குறைவா என்பது கணக்கில் வரும். உதாரணத்திற்கு தற்போது முதலிடத்தில் இருக்கும் அல்லு அர்ஜுன் 'புஷ்பா 2' படத்திற்காக 300 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார் என்பது தகவல். ஆனால், அந்தப் படத்தில் நடிப்பதற்காக அவர் 100 நாட்களுக்கு மேல் தேதிகளைக் கொடுத்துள்ளார். அப்படிப் பார்த்தால் ஒரு நாள் சம்பளம் 3 கோடி மட்டுமே.
அதே சமயம் கமல்ஹாசன் 'கல்கி 2898 ஏடி' படத்தில் நடிப்பதற்காக 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். அதற்காக அவர் கொடுத்த தேதிகள் 10 நாட்கள் மட்டுமே. ஒரு நாள் சம்பளம் மட்டும் 15 கோடி. இந்த சம்பளக் கணக்கை அப்படத்தின் தயாரிப்பாளரான அஸ்வினி தத் சொன்னதாக நடிகர் யூகி சேது சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்தக் கணக்கின் படி பார்த்தால் இந்திய அளவில் அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் கமல்ஹாசன் தான் முதலிடத்தில் உள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan