Paristamil Navigation Paristamil advert login

ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களுக்கு பின் சைப்ரஸுக்கு பயணம் செய்யும் மக்ரோன்!!

ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களுக்கு பின் சைப்ரஸுக்கு பயணம் செய்யும் மக்ரோன்!!

8 பங்குனி 2026 ஞாயிறு 14:29 | பார்வைகள் : 2792


மத்திய கிழக்கு போரின் பின்னணியில், பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron நாளை சைப்ரஸுக்கு பயணம் மேற்கொள்கிறார். கடந்த வாரம் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களுக்கு இலக்கான ஐரோப்பிய ஒன்றிய நாடான Cyprus உடன் பிரான்ஸ் தனது ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக எலிசே அரண்மனை இன்று தெரிவித்துள்ளது.

பாபோஸ் (Paphos) நகரில் அவர் சைப்ரஸ் தலைவர் Nikos Christodoulides மற்றும் கிரீஸ் பிரதமர் Kyriakos Mitsotakis ஆகியோரை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பு கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்தி, பிராந்தியத்தில் பதற்றத்தை குறைக்கும் முயற்சியாக இருக்கும்.

மேலும், பிரான்ஸ் அந்தப் பகுதியில் தனது இராணுவ இருப்பை அதிகரித்து, விமானம் தாங்கி போர் கப்பல் Charles de Gaulle உட்பட பல பாதுகாப்பு வளங்களை அனுப்பியுள்ளது.  அதே நேரத்தில், அங்கு உள்ள ஐரோப்பிய குடிமக்களின் பாதுகாப்பையும் அவர்களை மீண்டும் நாடு திரும்பச் செய்வதையும் ஒருங்கிணைக்க பிரான்ஸ் முயற்சி மேற்கொள்கிறது.