சர்வதேச மகளிர் தினம்! - நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு!!
8 பங்குனி 2026 ஞாயிறு 09:01 | பார்வைகள் : 426
இன்று, மார் 8, சர்வதேச மகளிர் தினம் (Journée internationale des droits des femmes) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பிரான்சில் பெண்கள் சுதந்திரத்தையும், உடல் ரீதியான தாக்குதல்களுக்கு எதிராகவும் பலநூறு ஆர்ப்பாட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த ஆர்ப்பாட்டம், முக்கியமாக தீவிர வலதுசாரிகளுக்கு எதிராகவும், அக்கட்சியினருக்கு எதிராகவும் இடம்பெற உள்ளது. பிரான்சில் இனவெறி, பெண் வெறுப்பு மற்றும் ஓரினச்சேர்க்கை வெறுப்பை விதைக்கும் பணியில் தீவிர வலதுசாரிகள் ஈடுபடுவதாகவும், பிரிவினையை தூண்டுவதாகவும், பிரான்சில் இடம்பெறும் பெண் தாக்குதல்களுக்கு இவர்களது தூண்டுதலே காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று சனிக்கிழமை மாலை Orléans நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று பெண்கள் அமைப்பினால் இடம்பெற்றிருந்தது. 450 பேர் வரை கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பாசிசமும் வேண்டாம் - தீவிர வலதுசாரிகளும் வேண்டாம் (Non au fascisme, non à l'extrême droite) என கோஷங்களை எழுப்பினர். அதன் தொடர்ச்சி ஒன்று நாட்டின் 150 நகரங்களில் இடம்பெற உள்ளது.
தலைநகர் பரிசில் பிற்பகல் 2 மணிக்கு ஆர்ப்பாட்டம் Stalingrad இல் ஆரம்பித்து Gare du Nord வழியாக Place de la République இல் சென்று நிறைவடைய உள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan