BYD அறிமுகம் செய்த புதிய Blade Battery- 5 நிமிடங்களில் FastCharge
8 பங்குனி 2026 ஞாயிறு 06:10 | பார்வைகள் : 1969
சீன மின்சார வாகன உற்பத்தியாளர் BYD, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தனது முக்கியமான பேட்டரி மேம்பாட்டை அறிவித்துள்ளது.
“Blade Battery” எனப்படும் இரண்டாம் தலைமுறை பேட்டரி, 20 சதவீதம் முதல் 97 சதவீதம் வரை வெறும் 12 நிமிடங்களில் சார்ஜ் ஆகும்.
மேலும், இது -20°C வரை குறைந்த வெப்பநிலையிலும் செயல்படக்கூடியது என நிறுவனம் கூறுகிறது.
இந்த பேட்டரி, 777 கிலோமீட்டர் வரை பயண தூரத்தை (range) வழங்குகிறது.
BYD தலைவர் வாங் சுவான்ஃபூ, Denza Z9GT மற்றும் Yangwang U7 போன்ற மொடல்களுக்கு 1,000 கிலோமீட்டர் மேல் ரேஞ்ச் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
இந்த புதிய பேட்டரி சீனாவின் தேசிய பாதுகாப்பு தரநிலைகளை மீறிய சோதனைகளையும் வெற்றிகரமாக கடந்துள்ளது.
BYD, 2026 இறுதிக்குள் 20,000 “Flash Charging” நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. அதில் 2,000 நிலையங்கள் நெடுஞ்சாலைகளில் இருக்கும். தற்போது 4,000-க்கும் மேற்பட்ட நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
புதிய பேட்டரியுடன் 10-க்கும் மேற்பட்ட கார் மொடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
BYD, Tesla-வுடன் போட்டியிட 5 நிமிட super-charge தொழில்நுட்பத்தையும், குறைந்த விலையில் assisted-driving வசதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire