மத்திய கிழக்கில் இருந்து ஏற்றிவரப்பட்ட ஏராளமான பிரெஞ்சு மக்கள்!!
8 பங்குனி 2026 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 480
மத்திய கிழக்கில் நிலவிவரும் யுத்தம் காரணமாக அங்கு வசிக்கும் வெளிநாட்டவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதுவரை 4,300 பிரெஞ்சு மக்கள் அங்கிருந்து அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெப்ரவரி இறுதியில் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை ஆறு விமானங்களில் இந்த மீட்புப்பணிகள் இடம்பெற்றுள்ளது எனவும், இதில் பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுப்பிய ஒரு விமானமும் உள்ளதாகவும் அமைச்சர் Jean-Noël Barrot நேற்று சனிக்கிழமை தெரிவித்தார்.
அதேவேளை, இன்று மார்ச் 8, சனிக்கிழமை மேலும் பல விமானங்கள் இயக்கப்பட உள்ளதாகவும் அவர் அறிவித்தார். 3500 பிரெஞ்சு குடிமக்கள் பயணிகள் விமானத்திலும், , 800 பேர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் விமானத்திலும் அழைத்துவரப்பட்டதாக குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கில் இருந்து கிட்டத்தட்ட 5,000 பேர் நாடு திரும்ப கோரிக்கை வைத்துள்ளதாகவும், அவர்களில் 80% சதவீதமானோர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் யுத்தத்தில் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் தற்போது வரை 1,500 பேர் வரை கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan