Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் பாதையில் வரையப்பட்டுள்ள பச்சை கோடுகள் என்ன?

பரிஸ் பாதையில் வரையப்பட்டுள்ள பச்சை கோடுகள் என்ன?

7 பங்குனி 2026 சனி 19:33 | பார்வைகள் : 440


பரிஸ் நகராட்சியின் சேவைகள் கண்டுபிடித்த ஒரு இயந்திரத்தின் உதவியுடன் வரையப்பட்ட இந்த பச்சை கோடு, இந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அரை மரதன் (semi-marathon) போட்டியில் ஓடுபவர்கள் பாதையை பின்பற்ற உதவும். ஆனால் அது முழுமையாக சரியானதாக இருக்காது.

வாகன ஓட்டிகள், சைக்கிள் பயணிகள் மற்றும் நடந்து செல்லுபவர்கள் இதைக் கவனித்திருக்கலாம். பரிஸ் நகரின் தெருக்களில் சாலையின் மேல் ஒரு பச்சை கோடு வரையப்பட்டிருக்கிறது. 2026 மார்ச் 8 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பரிஸ் அரை மரதன் போட்டியை முன்னிட்டு அது வரையப்பட்டுள்ளது.

இந்த “பச்சை கோடு” போட்டியின் பாதையை தொடக்கம் முதல் முடிவு வரை காட்டுகிறது. நீங்கள் அந்த கோட்டை முழுவதும் பின்தொடர்ந்தால், சுமார் 21 கிலோமீட்டருக்கு மேல் தூரம் பயணிப்பீர்கள். 

அந்த பாதை சென் நதிக்கரைகள், வன்சென் காடு, மற்றும் பரிஸ் நகரின் 12-வது மாவட்டம் வழியாக செல்கிறது. ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் பரிஸ் முழு மரதானுக்காக வரையப்படும் பச்சை கோட்டை பின்தொடர்ந்தால், அது 42 கிலோமீட்டருக்கும் மேல் தூரமாக இருக்கும்.

பரிஸ் நகர சுத்தம் செய்யும் துறையினர் கண்டுபிடித்து காப்புரிமை பெற்ற ஒரு இயந்திரம், ஒரு வேனின் பின்னால் இழுத்துச் செல்லப்பட்டு சாலையில் பச்சை நிறத்தை வரையகிறது. போட்டியை ஏற்பாடு செய்யும் ASO அமைப்பினர் கூறுகையில்: “இது மிகவும் சிக்கலான செயல்முறை. பரிஸ் நகர சுத்தம் செய்யும் குழுவும், காவல் துறையினரின் பாதுகாப்பும் தேவை. 

போக்குவரத்து நடக்கும்போது சில சமயம் எதிர்திசையிலும் வரைய வேண்டி வரும். மேலும் மழை பெய்தால் வரைய முடியாது, ஏனெனில் நிறம் உலராது.” இந்த பச்சை கோட்டை பின்தொடர்ந்து ஓடினால் சரியாக 21.0975 கி.மீ. (அரை மரத்தான் தூரம்) கிடைக்கும் என்று நினைப்பவர்கள் ஏமாற்றமடையலாம்.

2023 இல் சர்வதேச அளவையாளர் Jean-Marie Grall விளக்கினார்: “இந்த கோடு ஓடுபவர்களுக்கு வழிகாட்டுதலுக்காக மட்டுமே. சிலர் சொல்வது போல இது சரியான அல்லது குறைந்த தூரப் பாதை அல்ல. உதாரணமாக வலமிருந்து இடமாக திரும்பும்போது ஒரு நல்ல பாதையை காட்டுகிறது. ஆனால் அது எப்போதும் துல்லியமான தூரமாக இருக்காது.”

இந்த 2026 மார்ச் 8 ஞாயிற்றுக்கிழமை, சுமார் 50,000 பேர் Hoka Semi-Marathon de Paris போட்டியில் பங்கேற்க இருக்கிறார்கள். இது உலகின் மிகப்பெரிய அரை மரதன் போட்டிகளில் ஒன்றாகும்.

போட்டி காலை 8 மணி முதல், Boulevard Saint-Germain பகுதியில் தொடங்கி, பல்வேறு நேர அட்டவனைகளில் பங்கேற்பாளர்கள் புறப்படுவார்கள். போட்டியின் நிறைவு Place de la Bastille பகுதியில் நடைபெறும்.

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026