Paristamil Navigation Paristamil advert login

திருமணத்திற்கு ஒரு பவுன் தருவதாக விஜய் தேர்தல் வாக்குறுதி

திருமணத்திற்கு ஒரு பவுன் தருவதாக விஜய் தேர்தல் வாக்குறுதி

8 பங்குனி 2026 ஞாயிறு 06:13 | பார்வைகள் : 198


60 வயது வரை உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2500, வருடத்திற்கு 6 இலவச கேஸ் சிலிண்டர்கள், பெண்களின் திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் வழங்கப்படும் என்று தவெக  தேர்தல் வாக்குறுதிகளை அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் வெளியிட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தவெகவின் மகளிர் தின விழா கொண்டாட்டங்கள் இன்று நடைபெற்றது. விழாவில் கட்சியின் தலைவரும், நடிகருகமான விஜய் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள் விவரம் வருமாறு;

• பெண்கள், குழந்தைகள், முதியோர் நலனில் அவர்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்துவதே தவெக அடிப்படை நிலைப்பாடு. அதற்கென தனி இலாகா ஏற்படுத்தப்படும். அந்த இலாகா எனது நேரடி கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும் இருக்கும்.

• 60 வயது வரை உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும்.

• அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும்.

• அண்ணன் சீர் திட்டத்தின்படி ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள தங்கைகளின் திருமணத்திற்காக ஒரு சவரன் தங்கமும், தரமான பட்டுசேலையும் தாய் வீட்டில் இருந்து அண்ணன் சீர் ஆக அளிக்கப்படும்

• பொது போக்குவரத்து வாகனங்களில் பாதுகாப்பு பட்டன்கள் அமைக்கப்படும்.

• பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க  அஞ்சலை அம்மாள் அதி விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும்.

• ரேஷன் கடைகளில், பள்ளிகளில் விலையில்லா நாப்கின் வினியோகிக்கப்படும்.

இவ்வாறு விஜய் தமது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.

வொர்த் இல்லை

தன் மீது மனைவி சங்கீதா தொடர்ந்த விவாக ரத்து வழக்கு பற்றி விஜய் ஏதாவது பேசுவார் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தனர். முந்தைய கூட்டத்தில் அது பற்றி பேசாமல் மவுனமாக கடந்து சென்ற விஜய், இன்று அது பற்றி பேசினார்.

தொண்டர்கள் வருத்தப்படும் அளவுக்கு விவாக ரத்து வழக்கு ஒன்றும் வொர்த் இல்லை. அதை நான் பார்த்துக் கொள்கிறேன், என்று கூறினார் விஜய்.

சினிமா தயாரிப்பாளர் வீட்டு திருமணத்துக்கு, நடிகை திரிஷாவுடன் ஜோடியாக விஜய் சென்றது, கேலி, கிண்டல் விமர்சனங்களுக்கு ஆளான நிலையில், இவ்வாறு அவர் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026